விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் இரசாயன வகைகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி அனுமதியானது பெரும்போகத்தில் விவசாய செய்கைகளில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் சிரேஸ்ட பேராசிரியர் உதித் கே. ஜயசிங்க (Prof. Udith K.Jayasinghe) ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டுள்ளார்.

பெரும்போகச் செய்கைக்கான அவசர மற்றும் அத்தியாவசிய தேவையாகக் கருதி விவசாய இரசாயனங்கள் மற்றும் தாவர போசாக்கு பொருட்கள் என்பன இறக்குமதி செய்ய  அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

முன்னதாக இராசாயன உர வகைகளின் பயன்பாட்டை தடையும் செய்யும் பொருட்டு இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

எனினும், நாட்டில் அதன்பின்னர் ஏற்பட்ட உர நெருக்கடியினால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், விவசாய நடவடிக்கையில் ஈடுபடுவதையும் நிறுத்தினர்.

அதுமாத்திரமன்றி பல்வேறு போராட்டங்களிலும் விவசாயிகளும் எதிர்கட்சிகளும் ஈடுபட்டிருந்தன.

இதற்கிடையில், இதே நிலைமை நீடிக்குமாயின் அடுத்தாண்டு பெரும் பஞ்சம் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்துஇ

இந்த நிலையிலேயே மீண்டும் இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதனிடையே ஜனாதிபதி கோட்டாபயவின் இந்த திட்டம் முழுமையாக தோல்வியடைந்துள்ளதாக எதிர்கட்சிகள் கடுமையாக சாடியுள்ளன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி