வேலை நிறுத்தம் செய்தமையால் பாடசாலைகளுக்கு சமுகமளிக்காத ஆசிரியர்களின் சம்பளத்தை வெட்டுவதாக பலிவாங்கும் கருத்தைக் கூறிய வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே இலங்கை கம்யூனிஸக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி குறிப்பிடுகிறது.

கம்யூனிஸக் கட்சியின் மத்தியக் குழு கொழும்பு தலைமையகத்தில் இன்று (24) கூடியதாகவும், அதன்போது ராஜா கொல்லுரேவை பதவியிலிருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டதாகவும் கட்சி கூறுகிறது.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் சம்பளத்தை வெட்டுவது குறித்து ஆராய்வதாக கம்யூனிஸக் கட்சியின்; சிரேஷ்ட உறுப்பினரான ராஜா கொல்லுரேவின் அந்தக் கூற்று எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளினதும்,​தொழிற்சங்கங்களினதும் கடுமையான விமர்சனத்திற்குள்ளானது.

அவரது கூற்றை கம்யூனிஸக் கட்சியும் கண்டித்துள்ளதுடன், இதனால் அவரை கட்சிப் பதவியிலிருந்து நீக்க தீர்மானித்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி