உத்தரகாண்டில் கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. தற்போது மழை பெரும்பானான இடங்களில் குறைந்துள்ளது. கனமழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, அந்த மாநிலத்தின் குமன் மாகாண பகுதிக்கு உள்பட்ட நைனிதா, சம்பவாட், அல்மொரா, பிதோரகர்க், உதம்சிங் நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவால் மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளது.

இந்நிலையில், உத்தரகாண்டில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 19 பேர் காயமடைந்துள்ளனர். கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் 5 பேர் மாயமாகியுள்ளதால் அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி