leader eng

மன்னார் கடற்பரப்பில் எரிபொருள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டால் மன்னார் மக்கள் இடம்பெயர வேண்டி ஏற்படும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் மன்னார் மாவட்ட தலைவர் என்.எம்.ஆலாம்(N.M.Alam) எச்சரித்துள்ளார்.

அண்மையில் மன்னார் கடற்பரப்பில் எண்ணெய் அகழ்வுக்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ஓமான் அனுமதி கோரிய போதிலும், அதனை தாம் நிராகரித்ததாக சிறீலங்கா அரசாங்கம் கூறியிருந்த நிலையில், அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

உலக உணவு தன்னாதிக்க வாரத்தையொட்டி மன்னார் மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்து வெளியிட்ட அவர், இந்திய மீனவர்களின் அத்துமீறல் விடயத்தில் தமது கோரிக்கைகள், செவிடன் காதில் ஊதிய சங்காகவே உள்ளதாக கூறியுள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி