Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

கனடாவில் இலங்கையர்கள் கொலை: 4 குழந்தைகளுடன் தாய் உட்பட அறுவர் பலி

T

The Leader Desk

மார்ச் 8, 2024 • 4:27 AM

கனடாவில் இலங்கையர்கள் கொலை: 4 குழந்தைகளுடன் தாய் உட்பட அறுவர் பலி   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • படுகொலைச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
  • புதன்கிழமை இரவு, தெற்கு ஒட்டாவா புறநகர் பகுதியில் உள்ள ஒரு இல்லத்தில், தாய் அவரது 4 குழந்தைகள் மற்றும் குடும்ப நண்பர் உட்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
  • சம்பவத்தின் போது, 35 வயதான தர்ஷனி பண்டாரநாயக்கா என்ற பெண் மற்றும் 7 வயது, 4 வயது, 2 வயது மற்றும் 2 மாதம் நிரம்பிய குழந்தைகளே உயிரிழந்துள்ளனர்.
  • குடும்ப நண்பரான 40 வயதுடைய அமரகோன் முதியன்சே என்ற நபரும் கொல்லப்பட்டுள்ளார்.
எழுத்து அளவு:

படுகொலைச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

புதன்கிழமை இரவு, தெற்கு ஒட்டாவா புறநகர் பகுதியில் உள்ள ஒரு இல்லத்தில், தாய் அவரது 4 குழந்தைகள் மற்றும் குடும்ப நண்பர் உட்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சம்பவத்தின் போது, 35 வயதான தர்ஷனி பண்டாரநாயக்கா என்ற பெண் மற்றும் 7 வயது, 4 வயது, 2 வயது மற்றும் 2 மாதம் நிரம்பிய குழந்தைகளே உயிரிழந்துள்ளனர். குடும்ப நண்பரான 40 வயதுடைய அமரகோன் முதியன்சே என்ற நபரும்  கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த 6 பேரும், கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். அத்தோடு, குறித்த குழந்தைகளின் தந்தையான தனுஷ்க விக்கிரமசிங்க, பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில், 19 வயதான ஃபெப்ரியோ டி-சொய்சா என்ற இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு எதிராக 6 முதல்நிலை கொலை மற்றும் ஒரு கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

சந்தேகநபர், சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து 15 கிலோமீற்றர் தொலைவில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளார். இவர், இலங்கைப் பிரஜை எனவும் மாணவராக கனடாவில் தங்கியிருந்தார் எனவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், மேற்படி சந்தேகநபரும் குறித்த குடும்பத்திற்கு அறிமுகமானவர் எனவும் அவர்களுடன் அதே வீட்டில் வசித்து வந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கொலை சம்பவத்திற்கான காரணம் தெரியவராத நிலையில், குற்றவாளி வியாழகிழமையன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டவேளை, அவருக்கு எதிரான குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

canada_2_copy.jpg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...