Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா இன்று ஆரம்பம்: இலங்கை பக்தர்கள் 4,000 பேர் பங்கேற்பு: இந்தியா புறக்கணிப்பு

T

The Leader Desk

பிப்ரவரி 23, 2024 • 3:52 AM

கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா இன்று ஆரம்பம்: இலங்கை பக்தர்கள் 4,000 பேர் பங்கேற்பு: இந்தியா புறக்கணிப்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்திய மீனவர்கள் விழாவைப் புறக்கணித்துள்ளனர்.
  • ராமேஸ்வரத்திலிருந்து 12 கடல் மைல் தொலைவிலும் இலங்கை நெடுந்தீவில் இருந்து 8 கடல்மைல் தொலைவிலும், பாக்கு நீரிணை கடற்பரப்பில் அமைந்துள்ளது கச்சத்தீவு.
  • இதை ஏற்று 75 விசைப்படகுகள், 28 நாட்டுப் படகுகளில் 3,455 பேர் கச்சத்தீவு செல்லத் திட்டமிட்டிருந்தனர்.
  • இந்நிலையில், ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் 3 பேருக்கு இலங்கையில் உள்ள ஊர்க்காவல் துறை நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்தது.
எழுத்து அளவு:

இந்திய மீனவர்கள் விழாவைப் புறக்கணித்துள்ளனர்.

ராமேஸ்வரத்திலிருந்து 12 கடல் மைல் தொலைவிலும் இலங்கை நெடுந்தீவில் இருந்து 8 கடல்மைல் தொலைவிலும், பாக்கு நீரிணை கடற்பரப்பில் அமைந்துள்ளது கச்சத்தீவு. இங்குள்ள அந்தோணியார் ஆலயத்தில் இன்றும் (பெப். 23), நாளையும் திருவிழா நடைபெறுகிறது.

இதில் பங்கேற்க வருமாறு யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் அருட்தந்தை ஜஸ்டின் ஞானப்பிரகாசம், ராமேசுவரம் வேர்க்கோடு பங்குத்தந்தை சந்தியாகுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதை ஏற்று 75 விசைப்படகுகள், 28 நாட்டுப் படகுகளில் 3,455 பேர் கச்சத்தீவு செல்லத் திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில், ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் 3 பேருக்கு இலங்கையில் உள்ள ஊர்க்காவல் துறை நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்தது. இதை ரத்து செய்து, மீனவர்கள் 3 பேரையும் விடுவிக்கக் கோரி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

மேலும், கச்சத்தீவு திருவிழாவைப் புறக்கணிப்பதாகவும் அறிவித்தனர். இதனால், கச்சத்தீவுக்கு செல்லும் பயணத் திட்டத்தை ரத்து செய்வதாக வேர்க்கோடு பங்குத்தந்தை சந்தியாகு அறிவித்தார்.

இந்நிலையில், கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா இன்று (பிப். 23) மாலை 4 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. யாழ்ப்பாணம் முதன்மை குரு ஜோசப்தாஸ் ஜெயரத்தினம் தொடங்கி வைக்கிறார்.

தொடர்ந்து ஜெபமாலை, சிலுவைப் பாதை நிகழ்ச்சி, நற்கருணை ஆராதனை, இரவு அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்ட தேர் பவனி நடைபெறுகிறது. இரண்டாம் நாளான நாளை (பிப். 24) காலை 7.30 மணியளவில் சிறப்புத் திருப்பலி, கூட்டுப் பிரார்த்தனையை யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர்அருட்தந்தை ஜஸ்டின் ஞானப்பிரகாசம் நடத்தி வைக்கிறார். பின்னர் கொடி இறக்கத்துடன் விழா முடிவடைகிறது.

இந்த திருவிழாவில் இலங்கையைச் சேர்ந்த 4,000 பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா இன்று ஆரம்பம்: இலங்கை பக்தர்கள் 4,000 பேர் பங்கேற்பு: இந்தியா புறக்கணிப்பு | Tamil Leader | We Lead the Nation