Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

ஹைதி அதிபர் கொலையுடன் தொடர்புடைய 4 பேருக்கு துப்பாக்கி சூடு! 17 பேர் கைது

T

The Leader Desk

ஜூலை 9, 2021 • 6:19 AM

ஹைதி அதிபர் கொலையுடன் தொடர்புடைய 4 பேருக்கு துப்பாக்கி சூடு! 17 பேர் கைது

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதையடுத்து, அவர் புளோரிடாவுக்கு ஆம்புலன்ஸ் விமானத்தில் எடுத்துச்சென்று அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
  • இந்த கொலையில் சந்தேக குற்றவாளிகள் என கருதப்பட்ட 4 பேரை அந்த நாட்டு பாதுகாப்பு படையினர் கடந்த புதன்கிழமை அதிரடியாக சுட்டுக்கொன்றனர்.
  • இந்நிலையில், 28 பேர் கொண்ட குழு அதிபர் ஜோவனல் மோயிஸ் கொலையில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸ் உயர் அதிகாரி லியோன் சார்லஸ் தெரிவித்துள்ளார்.
  • பேரில் 26 பேர் கொலம்பியாவையும், 2 பேர் ஹைதி தீவை பூர்விகமாக கொண்ட அமெரிக்க நாட்டவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

இதையடுத்து, அவர் புளோரிடாவுக்கு ஆம்புலன்ஸ் விமானத்தில் எடுத்துச்சென்று அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. இந்த சம்பவம் அந்த நாட்டை உலுக்கி உள்ளது.

இந்த கொலையில் சந்தேக குற்றவாளிகள் என கருதப்பட்ட 4 பேரை அந்த நாட்டு பாதுகாப்பு படையினர் கடந்த புதன்கிழமை அதிரடியாக சுட்டுக்கொன்றனர். ஆனாலும், அதிபர் கொலையில் தொடர்புடையர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், 28 பேர் கொண்ட குழு அதிபர் ஜோவனல் மோயிஸ் கொலையில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸ் உயர் அதிகாரி லியோன் சார்லஸ் தெரிவித்துள்ளார். 28 பேரில் 26 பேர் கொலம்பியாவையும், 2 பேர் ஹைதி தீவை பூர்விகமாக கொண்ட அமெரிக்க நாட்டவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த 28 பேரில் 15 கொலம்பியர்கள், 2 அமெரிக்கர்கள் என மொத்தம் 17 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 3 கொலம்பியர்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்று விட்டனர். எஞ்சிய 8 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக பொலிஸ் அதிகாரி லியோன் சார்லஸ் தெரிவித்துள்ளார்.

அதிபர் ஜோவனல் மோயிஸ் கொல்லப்பட்டத்தையடுத்து அந்த நாட்டில் தற்போது தேசிய நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக பிரதமர் கிளாட் ஜோசப் மக்கள் அமைதி காக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதால் ஹைதியில் பொலிஸ் அதிகாரத்தை இராணுவம் கையில் எடுத்துக்கொண்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...