Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

நீதிபதிகளை வெளிநாட்டிலிருந்து அழைத்து வர வேண்டுமா? ரிஷாத் பதியுதீனின் வழக்கில் இருந்து விலகும் 4 வது நீதிபதி!

T

The Leader Desk

ஜூலை 5, 2021 • 9:36 AM

நீதிபதிகளை வெளிநாட்டிலிருந்து அழைத்து வர வேண்டுமா? ரிஷாத் பதியுதீனின் வழக்கில் இருந்து விலகும் 4 வது நீதிபதி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நீதிபதிகளான முர்து பெர்னாந்து, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட குழு, ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரை உடனடியாக விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த தனி மனுக்களை விசாரித்தது.
  • இதன் விளைவாக, உச்சநீதிமன்றம் இந்த வழக்கை எதிர்வரும் ஆகஸ்ட் 08ம் திகதிக்கு ஒத்திவைத்ததுள்ளது.
  • நவாஸ் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக மனுக்களை விசாரிப்பதில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தனர்.
  • எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி ஏப்ரல் 24 காலை சிஐடியால் கைது செய்யப்பட்டதாகவும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் கூறுகின்றனர்.
எழுத்து அளவு:

நீதிபதிகளான முர்து பெர்னாந்து, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட குழு, ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரை உடனடியாக விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த தனி மனுக்களை விசாரித்தது.

மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவில்  நீதிபதி மஹிந்த சமயவர்தன, தனிப்பட்ட காரணங்களுக்காக மனுக்களை விசாரிப்பதில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக, உச்சநீதிமன்றம் இந்த வழக்கை எதிர்வரும் ஆகஸ்ட் 08ம்  திகதிக்கு ஒத்திவைத்ததுள்ளது.

அதன்படி, இந்த மனுக்களை விசாரிப்பதில் இருந்து விலகிய நான்காவது உச்ச நீதிமன்ற நீதிபதி மஹிந்த சமயவர்தன ஆவார்.

முன்னதாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகளான ஜனக் டி சில்வா, யசந்த கோதாகொட மற்றும் ஏ.எச்.எம்.டி. நவாஸ் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக மனுக்களை விசாரிப்பதில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தனர்.

எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கைகளுடனும் தொடர்பில்லாத தங்களை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்திருப்பது சட்டவிரோதமானது என்ற தீர்ப்பளிக்குமாறு கோரி அவர்கள் அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்திருந்தார்கள்.

எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி ஏப்ரல் 24 காலை சிஐடியால் கைது செய்யப்பட்டதாகவும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் கூறுகின்றனர்.

 

கைது செய்யப்பட்டதற்கு எந்த நியாயமும் இல்லை என்று கூறிய ரிஷாத் பதியுதீன், சிறுபான்மை அரசியல் கட்சியின் தலைவரான தன்னை தர்மசங்கடத்திற்குள்ளாக்கவும் பழிவாங்கவும் முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.

ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன, எதிர்ப்பையும் தான்டி பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி பாதுகாப்பைக் கட்டியெழுப்புவதாகக் கூறுவது ஜனநாயகத்தின் இருப்புக்கு கடுமையான அச்சுறுத்தல் என்று கூறினார்.

ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான மசோதாவை எந்த வகையிலும் அங்கீகரிக்க முடியாது என்றும், தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய எடுக்கப்பட்ட எந்த நடவடிக்கைகளுக்கும் தனது கட்சி எதிர்ப்பு தெரிவிக்காது என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், வரலாற்றில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மட்டுமே என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

நீதிபதிகளை வெளிநாட்டிலிருந்து அழைத்து வர வேண்டுமா? ரிஷாத் பதியுதீனின் வழக்கில் இருந்து விலகும் 4 வது நீதிபதி! | Tamil Leader | We Lead the Nation