திறந்த பொருளாதாரக் கொள்கைக்குப் பின்னர் நாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழல் அதிகரித்ததை நினைவுகூர்ந்துள்ள, சிவில் சமூகம் மற்றும் வெகுஜன அமைப்புகள் 1978ற்குப் பின்னர், ஏற்பட்ட பொருளாதார மற்றும் சமூக எழுச்சியுடன் சமூக ரீதியாக களங்கப்படுத்தப்பட்ட சிலர் நாட்டின் தலைசிறந்த அரசியல்வாதிகளாக மாறியுள்ளதாக  சுட்டிக்காட்டுகின்றது.

இந்த நாட்டின் அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மீதான குடிமக்களின் அதிருப்தியைத் தவிர வேறு எதுவும் இந்த விடயத்தின் இறுதி முடிவாக அமையவில்லை எனத் தெரிவித்துள்ள மார்ச் 12 இயக்கம், "ஊழலுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து குரல் கொடுப்போம் - சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை அறிவித்து அவற்றை பொதுமக்களுக்கு பொறுப்பேற்க வேண்டிய பொன்னான தருணத்தை நாம் தவறவிடக்கூடாது." என அறிவித்துள்ளது.

"அதே நேரத்தில், பண்டோரா ஆவணங்கள் மாத்திரமல்ல,  தனிப்பட்ட அரசியல் கட்சிகள் ஒருவருக்கொருவர் முடிவில்லாத குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் போக்கும் அதிகரித்து வருகிறது."

117 நாடுகளைச் சேர்ந்த 600ற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் உலகின் பணக்காரர்கள் மற்றும் அதிகாரப் படைத்தவர்கள் உட்பட 300ற்கும் மேற்பட்டவர்களின் நிதி பரிவர்த்தனைகளை ஆய்வு செய்துள்ளனர். பிரதமரின் உறவினர் நிருபமா ராஜபக்ச மற்றும் அவரது கணவர் திருக்குமார் நடேசன் ஆகியோர் மிகவும் ஆடம்பர வாழ்க்கை வாழ போலி நிறுவனம் மூலம் சொத்து சேர்த்தமை தெரியவந்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் பொருந்தாது என்றாலும், ஒருபுறம் அவை நாட்டின் சமூகப் பிம்பத்தையும், அரசியல்வாதிகளையும் தீவிரமாக பாதித்துள்ள நிலையில், மறுபுறம் இந்த அரசியல்வாதிகளின் ஊழல் நடவடிக்கைகள் மூலம் பொது சொத்துக்கள் சூறையாடப்படுவதாக மார்ச் 12 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

இதை ஒரே ஒரு நடவடிக்கையால் சரிசெய்ய முடியாது என்றாலும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊழல் மற்றும் இலஞ்சத்தை எதிர்ப்பார்கள் எனின், ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதை நிறுத்தி, எடுக்க வேண்டிய அவசர நடவடிக்கைகளை முன்மொழிந்துள்ளது.

1. சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை பகிரங்கப்படுத்தல். (ஏற்கனவே இந்த அறிக்கையை வெளியிட்ட தூய அரசியலுக்கான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பல உறுப்பினர்களுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.)

2. தேர்தல் ஆணைக்குழுவின் கீழ் மக்கள் பிரதிநிதிகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை அறிவிப்பதை கட்டாயமாக்கும் சட்டம்.

3. சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளின் துல்லியம் மற்றும் வருடாந்த பகுப்பாய்வை சரிபார்க்க பொருத்தமான சுயாதீன பொறிமுறையை நிறுவுதல்.

4. பொய்யான தகவல்களை வழங்கவும், நிரூபிக்க முடியாத வருமான ஆதாரங்கள் மூலம் சம்பாதித்த செல்வத்தை பறிமுதல் செய்யவும் தேவையான சட்டம்.

அரசியல்வாதிகளின் சொத்துக்களை விளம்பரப்படுத்தாமல், அவர்களின் நம்பகத்தன்மை மற்றும் அவர்களின் உள்ளார்ந்த ஊழல் எதிர்ப்பு ஆகியவற்றை அறிவிக்க முடியாது என மார்ச் 12 இயக்கம் மேலும் சுட்டிக்காட்டுகிறது.

"உண்மையான மக்கள் பிரதிநிதியாக மாறுவதற்கான பொன்னான பாதை உங்களுக்குத் திறந்திருக்கும் நேரத்தில், அந்த சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை அறிவித்து உங்கள் தொகுதி மக்களுக்கு உங்கள் மீதான நம்பிக்கையை வழங்குவது சிறப்பான மற்றும் முன்மாதிரியான ஜனநாயக நடைமுறை என்பதை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம்.”

இந்த பிரச்சினைகள் குறித்து தனிநபர் பிரேரணை மூலம் நாடாளுமன்றத்தில் தொடர்புடைய சட்டங்களை நிறைவேற்ற முடியும் எனவும், அதன் முன்னோடிகளாக மக்கள் பிரதிநிதிகள் செயற்பட வேண்டுமெனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

"நீங்கள் அதைச் செய்யத் தவறினால், நீங்கள் ஒரு நல்ல மனிதராக இருந்தாலும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக உங்கள் பொறுப்பில் நீங்கள் தோல்வியடைவீர்கள். அந்த நடவடிக்கையின் மூலம், நீங்கள் ஊழலுக்கு எதிரானவர் என்பதை சமூகத்திற்கு நிரூபிக்க முடியும்."

அரசியல்வாதிகள் தங்கள் சொத்துக்களைக் காண்பிப்பதற்குப் பதிலாக தங்கள் சொத்துக்களை ஒரு ஒப்பீட்டு பகுப்பாய்வு மூலம் குடிமகன் விரும்பும் ஒரு நல்ல பொதுப் பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தும் இறுதி விருப்பத்தை அரசியல்வாதிகள் கொண்டுள்ளதாக ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

பண்டோரா ஆவண வெளிப்பாடுகளை விசாரணை செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டதைத் தொடர்ந்து கடந்த வாரம் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் திருக்குமார் நடேசன் வாக்குமூலம் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி