கறுவாப் பட்டை விவசாயத்துக்காக உரத்தைத் தருமாறு கேட்டு அஹுங்கல்ல- பொத்ஹது பகுதியில் கறுவாப் பட்டை விவசாயிகள் கொடும்பாவி எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அஹுங்கல்ல, கடுவில, மருதானை, பதிராஜ பிரதேசம், பத்திராஜகம, மஹம்மாகேஹெனவத்த, பொரலுகெட்டிய மற்றும் பொத்ஹது பகுதி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட கறுவாப் பட்டை விவசாயிகள் பங்கேற்றனர்.

உரம் இல்லாததால் கறுவாப் பட்டை விளைச்சல் குறைந்து அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கறுவாப் பட்டை விளைச்சல் இல்லாமல் மக்கள் பட்டினி கிடக்கின்றனர் என்றும் வேலை செய்ய முடியாத அரசாங்கம் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என் றும் இரண்டு வருடங்களுக்குப் பின்னர் தான் வேலை செய்ய முடியாது என்பதை அறிந்து கொண்டீர்களா? அனுபவம் இல்லை என்றால் அரசாங்கத்தை ஏன் பொறுப்பேற்க வேண்டும்? எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்துடன் நாட்டின் ஜனாதிபதி பசிலா , கோத்தாவா? மஹிந்த நாமலுக்கு வழி வகுக்கின்றார், மகன் அமெரிக் காவுக்கு வரும்படி தந்தையை அழைப்பது வேலை செய்யத் தெரியாதை அறிந்தபடியால் தான் என்பது போன்ற பதாதைகளைக் கையில் ஏந்தியவாறு விவசாயிகள் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் கொடும் பாவி எரித்தும் விவசாயிகள் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் போராட்டத்தில் அவர்களுக்கு ஆதரவாக நெல் மற்றும் காய்கறி விவசாயிகளும் அதிக அளவில் வருகை தந்திருந்தனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்