2022ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ள பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டுட்ரேட், தீவிர அரசியலில் இருந்தே முழுமையாக விலகப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

ஆனால், தனக்குப் பதிலாக தனது மகள் தேர்தலில் போட்டியிடுவார் என்று தெரிவித்துள்ளார்.

"ஜனாதிபதி பதவிக்கு நான் தகுதியானவர் என்று பிலிப்பைன்ஸ் மக்கள்  நினைக்கவில்லை. இனியும் நான் அப்பதவியில் இருப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானதாக அமையும். அதனால் நான் எனது ஓய்வை இன்று  அறிவிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாபதி ரொட்ரிகோ டுட்ரேட், பிலிப்பைன்ஸில் யாரேனும் போதைப் பொதைப்பொருட்களைப் பயன்படுத்தினாலும், விற்றாலும் அவர்களை சுட்டுக் கொன்றுவிடுவார்.

மனித உரிமை ஆர்வலர்களின் பேச்சை இவர் துளியும் கருத்தில் எடுப்பதில்லை இந்த சட்ட விரோதக் கொலை செய்வதற்கென்றே தனியாக ஒரு கும்பலை இவர் வைத்திருக்கிறார்.

 72 வயதாகும் ரொட்ரிகோ டுட்ரேட் 1986ஆம் ஆண்டில் இருந்து கடந்த ஆண்டுவரை தேவோ நகரின் மேயராக இருந்தவர். அவரது ஆட்சிக்கு பிலிப்பைன்ஸில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ள நிலையிலேயே அவர், அரசியலில் இருந்தே ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி