500 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு வழங்க உலக வங்கியின் நிறைவேற்றுச் சபை அனுமதி வழங்கியுள்ளது. விவசாயத்துறை சார்ந்த அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக உலக வஙகியினால் வழங்கப்படும் இந்தக் கடன் பணத்தின் ஊடாக சில மாவட்டங்களில் கிராமங்களில் வசிக்கும் சுமார் 16 மில்லியன் மக்கள் பயனடைவார்களென உலக வங்கி மதிப்பீடு செய்துள்ளது.

இதுவரை உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ள பல்வேறு கடன் மற்றும் நிதியுதவிகள் மூலம் மக்கள் உண்மையிலேயே பயனடைந்துள்ளார்களா என்பது குறித்து விவாதிக்கக் கூடிய காரணிகள் வெளிவந்துள்ளன.

இறுதியில் மக்களால் செலுத்தப்பட வேண்டியுள்ள இந்தக் கடன் பயனுள்ள திட்டங்களில் ஈடுபடுத்தியமை மற்றும் பிரதிபலன் கிடைத்துள்ளமை சம்பந்தமாக பல வருடங்கள் நாட்டை ஆண்ட ஆட்சியாளர்கள் பொறுப்புக் கூறுவதில்லை.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி