மன்னாரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு, எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெற இருப்பதாக கூறி, அந்நிகழ்விற்கு தடை உத்தரவை பிறப்பிக்குமாறு மன்னார் நீதிமன்றத்தில் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்த நிலையில் நீதிமன்றம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ் சிவகரன்தான், குறித்த நினைவேந்தலை மேற்கொள்ள உள்ளதாக கூறியே பொலிஸார் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு சிவகரனுக்கு கிடைக்கப்பெற்ற அழைப்பின் பேரில் , நேற்று அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தார்.

இதன்போது, சிவகரன் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.சிராய்வா மற்றும் சட்டத்தரணி அன்ரனி றொமோசன் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தனர். இதன்போது நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணிகள், தமது சமர்ப்பணத்தை முன்வைத்தனர்.

அதாவது, மன்னார் பொலிஸார் தாக்கல் செய்தது போல் மக்களை ஒன்று சேர்த்து நினைவேந்தலை நடத்த எவ்வித ஏற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை எனவும், பொலிஸார் கற்பனையில் பொய்யான வழக்கை மன்றில் தாக்கல் செய்துள்ளதாகவும் சமர்ப்பணத்தை சட்டத்தரணிகள் முன்வைத்தனர்.

எனவே, பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.

இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான், “சிவகரன் என்பவர் எதிர்வரும் 26ஆம் திகதி நித்திலம் பதிப்பகத்தில் மக்களை ஒன்று கூட்டி எவ்வித ஒன்று கூடலையும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்ததுடன், , தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், குறித்த வழக்கை எதிர்வரும் 1 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாகவும் உத்தரவிட்டார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி