தேசிய ரூபவாஹினியானது ஒட்டுமொத்த மக்கள் மத்தியிலும் சமத்துவத்தையும், ஒற்றுமையையும் வளர்க்கும் விதமாக செயற்படுவதற்குப் பதிலாக, துவேசத்தையும், வெறுப்பையும் வளர்க்கக் கூடிய கருத்துக்களை ஒலிபரப்புவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இது சம்பந்தமாக பல்வேறு தரப்பினர் பகிரங்கமாக விமர்சித்து வருவதுடன், ஊடக அமைச்சருக்கும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

செப்டம்பர் 18ம் திகதி காலை 8.30 மணிக்கு தேசிய ரூபவாஹினியில் ஒலிபரப்பப்பட்ட ஆயுபோவன் நிகழ்ச்சியில் பங்குபற்றிய கலபொடஅத்தே ஞானசார தேரர் முஸ்லிம் மக்கள் சம்பந்தமாக சந்தேகத்தையும் வெறுப்பையும் தோற்றுவிக்கும் வகையில் பேசியுள்ளார்.

முஸ்லிம் மக்களை ‘நடமாடும் குண்டுதாரிகளாக’ குறிப்பிட்டுள்ளதோடு, ‘முஸ்லிம் தீவிரவாதிகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் செயற்படக் கூடும்’ எனக் கூறி பார்வையாளர்கள் மத்தியில் சந்தேகத்தையும் வெறுப்பையும் தோற்றுவிக்கும் வகையில் கூறியுள்ளதோடு, ‘முஸ்லிம் மக்கள் ஆயுதம் ஏந்திக் கொண்டிருக்கிறார்கள்’ என கோபத்துடனும், வெறுப்புடனும் கூறியுள்ளார்.

இந்த பாரதூரமான கூற்று மற்றும் வெறுப்பூட்டும் கருத்துக்கள் சம்பந்தமாக மேற்படி நிகழ்ச்சியை நடத்திய அறிவிப்பாளர் அசேல பண்டாரநாயக ஞானசார தேரரின் கருத்துக்களுக் எவ்வித இடையூறும் செய்யவில்லை, விசேடமாக தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனம் அன்றிலிருந்து இன்று வரை இந்த நிகழ்சியினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அதிர்ச்சியை வெளிக்காட்டவோ, வருத்தம் தெரிவிக்வோ இல்லை.

முஸ்லிம் மக்கள் சம்பந்தமாக ஞானசார தேரர் தொடுத்த குற்றங்கள் சம்பந்தமாக நம்பத்தகுந்த சான்றுகள் இருக்குமாயின், அது குறித்து பாதுகாப்புப் பிரிவுகளுக்கு அவர் தகவலளித்திருக்க வேண்டும். தொலைக்காட்சி ஊடகத்தினால் பார்வையாளர்கள் மத்தியில் அச்சத்தையும் வெறுப்பையும் பரப்புவது கடுமையான குற்றமாகும்.

தேசிய ஒலிபரப்புக் கூட்டுதாபனம் இந்த நிகழ்ச்சியை நேரடியாக ஒலிபரப்பியதன் பின்னர், இணையத்ளங்கள் ஊடாகவும், யூ டியூப் ஊடாகவும் இந்த நிகழ்ச்சி தொகுக்கப்படாமல் பார்வையாளர்களை அச்சுறுத்தி வெறுப்பை பரப்பி வருகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி