ஆசிரியர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளமையால் சமூக வலைத்தளங்கள் ஊடாக தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட சங்கத்தின் செயலாளருமான பொன்னுதுரை விஜயரூபன் கூறுகிறார்.

இது தொடர்பில் அவர் மட்டக்களப்பு பொலிஸில் செய்த முறைப்பாட்டிற்கமைய, பிள்ளையானின் படத்தைக் கொண்ட ‘முகநூல் நண்பர்கள்’ என்ற சமூக வலைத்தளத்தினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய இராணுவத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் கொல்லப்பட்ட தொழிற்சங்கத் தலைவரான வண்ணியசிங்கத்தை நினைவுபடுத்தி தனக்கும் அப்படியானதொரு நிலைமை ஏற்படக் கூடுமென அச்சுறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாணப் பிரதிநிதி பொன்னுதுரை விஜயரூபன் செப்டம்பர் 22ம் திகதி நடத்திய ஊடகச் சந்தின் போது கூறியுள்ளார்.

கல்வி அமைச்சின் கீழுள்ள தமது தனிப்பட்ட ஆவனங்களில் சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்படி, அரசாங்கத்தின் பங்காளியான ‘தமிழ் மக்கள் விடுதiலைப் புலிகள்’ கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அல்லது பிள்ளையானின் கட்சியானது இந்த அச்சுறுத்தலோடு சம்பந்தப்பட்டிருக்கும் என்ற சந்தேகம் உள்ளதாகவும் விஜயரூபன் கூறியுள்ளார்.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஆசிரியர்களின் போராட்டத்தை பயங்கரவாத செயலோடு சமப்படுத்தி கூறியதன் பின்னர் தன்மீது இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி