ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதல் வருடத்தில் குறைந்தளவு பங்களிப்பை வழங்கிய பத்து மக்கள் பிரதிநிதிகளில் பாதி பேர் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

ஓகஸ்ட் 2021 இல் ஒரு வருடத்தை பூர்த்தி செய்த ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் குறைந்தளவு பங்களிப்பினை வழங்கிய 10 உறுப்பினர்களை அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.

வெரைட் ஆராய்ச்சி நிறுவனத்தால் நடத்தப்படும் manthri.lkஇன் ஆய்விற்கு அமைய, பத்தில் ஐந்து பேர் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள்.

நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்  இரண்டு உறுப்பினர்களும் இதில் அடங்குகின்றனர்.

ஏனைய மூவரும் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

கொடிய தொற்றுநோய் இருந்தபோதிலும், ஓகஸ்ட் மாதத்தில் நாடாளுமன்ற அமர்வுகள் எதுவும் இடம்பெறவில்லை எனினும், இறுதிக்குள், கோவிட் தொற்றுநோய் இருந்தபோதிலும், 86 நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெற்றுள்ளன.

பின்வரும் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்கள் பங்கேற்ற அமர்வுகளுக்கு அமைய  1-10 வகையில் தரப்படுப்பட்டுள்ளதாக manthri.lk தெரிவிக்கின்றது.

1. டிரான் அலஸ் - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

2. அலி சப்ரி ரஹீம் - முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு

3. மர்ஜான் பலீல் - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

4. நிபுண ரணவக்க - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

5. இராஜவரோதயம் சம்பந்தன் - இலங்கை தமிழரசுக் கட்சி

6. குலசிங்கம் திலீபன் - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி

7. சாரதி துஷ்மந்த - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

8. உதயகாந்த குணதிலேக - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

9. எம்.எஸ். தௌபிக் - ஐக்கிய மக்கள் சக்தி

10. அப்துல் ஹலீம் - ஐக்கிய மக்கள் சக்தி

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி