மட்டக்களப்பில் தமிழ் மாவீரர்களை நினைவுகூருவதை தொற்றுநோய் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தை பயன்படுத்தி நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்திய இராணுவத்தின் வெளியேற்றம் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதமிருந்து 34 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ்ப்பாண அரசியல் துறை பொருப்பாளர் கேணல் திலீபன் என்ற ராசையா பார்த்தீபனின் நினைவாக மட்டக்களப்பில் ஒரு வாரம் நினைவேந்தல் ஏற்பாடு செய்யப்பட்டது.

1987 செப்டம்பர் 15 ஆம் திகதி 5 கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதமிருக்கத் தொடங்கிய திலீபன் செப்டம்பர்  26 ஆம் திகதி 11 வது நாள் உயிர் நீத்தார்.

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு சொந்தமான இடத்தில் செப்டம்பர் 15 முதல் 26 வரை நடைபெறவிருந்த இந்த ஆண்டு நினைவேந்தல் காத்தான்குடி காவல்துறையின் வேண்டுகோளுக்கு இணங்க மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி பொலிஸ் OIC கஜநாயக்க, இத்தகைய நினைவுகூருதல்கள் எதிரிகளின் தாக்குதலுக்கு வழிவகுக்கும் என்றும், கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தற்போதைய சுகாதார விதிமுறைகளின்படி இத்தகைய நினைவேந்தல்கள் தடை செய்யப்பட வேண்டும் நீதிமன்றத்தை கேட்டிருந்தார்.

காத்தான்குடி OIC அவர்கள் பொலிஸ் உளவுத்துறை அத்தகைய நினைவேந்தலை நடத்தத் தயாராகி வருவதை வெளிப்படுத்தியதாக கூறினார்.

மட்டக்களப்பு மேயர் தியாகராஜா சரவணபவன், கிருஷ்ணபிள்ளை சேயோன்,பேரின்பராசா ​​ஜெனகன் மற்றும் கதிஹரன் நிசாந்தன் உள்ளிட்ட நினைவேந்தலின் அமைப்பாளர்களுக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் திலீபனின் நினைவேந்தலை தடைசெய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி