கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிராக ஒகஸ்ட் 3ம் திகதி நடைபெற்ற அமைதியான எதிர்ப்பு நடவடிக்கையில் பங்கேற்ற குற்றத்திற்காக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள கோஷிலா ஹன்ஸமாலிக்கு கொரோனா தொற்றியிருப்பதால் அம்பேபுஸ்ஸ சிகிச்சை நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இலவச் கல்விக்கான மாணவர் மக்கள் இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்பு நடவடிக்கையின் பின்னர், பொய் குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட் அவ்வியக்கத்தின் செயற்பாட்டாளர்களில் ஒருவரான கோஷிலா ஹன்ஸமாலி பெரேரெ என்பவரே சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார்.

இதற்கு முன்பு கிடைத்த செய்திகளின்படி, இந்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்து 3 பேருக்கு கொவிட் தொற்றியிருந்தமை தெரியவந்தது. சிறைப்படுத்தப்பட்டிருந்த 5 எதிர்ப்பாளர்களுக்கு ரபிட் அன்டிஜன் பரிசோதனை செய்த போது அவர்களுக்கு கொவிட் தொற்றியிருக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டதனால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

ஆனால், தடுப்புக் காவலில் இருந்த சமீர கொஸ்வத்த, வசந்த முதலிகே மற்றும் அமில சந்தீப ஆகியோருக்கு கொவிட் தொற்றியிருப்பது கடந்த ஒகஸ்ட் 26ம் திகதி தெரியவந்துள்ளது. இதன்படி இவர்கள் தடுப்புக் காவலில் இருந்த போது கோவிட் தொற்றியிருப்பது தெளிவாகிறது.

ஓகஸ்ட் 03ம் திகதி பத்தரமுல்ல, பாராளுமன்ற சந்திக்கு அருகில் நடைபெற்ற மாணவர் மக்கள் இயக்கத்தின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த அவ்வியக்கத்தின் கோஷிலா ஹன்ஸமாலி, மு.சோ.கட்சியின் நிர்வாகச் செயலாளர் சமீர கொஸ்வத்த ஆகியோர் அன்றிரவே கைது செய்யப்பட்டனர்.

பல்கலைக் கழக விரிவுரையாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக சென்றுக் கொண்டிருந்த இலங்கை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் அமில் சந்தீப ஒகஸ்ட் 5ம் திகதி அடையாளம் தெரியாத சிலரால் கடத்தப்பட்டார். தொலைக்காட்சி விவாதமொன்றில் பங்கேற்றுவிட்டு ஒகஸ்ட் 6ம் திகதி அதிகாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்த அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே கைது செய்யப்பட்டார். அதோடு, ஒகஸ்ட் 13 திகதி ரஜரட்ட பல்கலைக் கழக மாணவரான ஹேஷான் ஹர்ஷனவும் கைது செய்யப்பட்டார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி