கொத்தலாவல தனியார் பல்கலைக் கழக சட்டமூலத்திற்கு எதிராக இலவச கல்விக்கான மாணவர் – மக்களி இயக்கத்தினர் கடந்த ஒகஸ்ட் 3ம் திகதி பாராளுமன்றத்திற்கு அருகாமையில நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 5 எதிர்ப்பாளர்கள் விடயத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நீதி சம்பந்தமான அடிப்படை கொள்கைகளுக்கு ஏற்ப சட்ட ரீதியில் பாதுகாப்பு வழங்காமல் பலி வாங்கப்படுவதாக முன்னிலை சோஷலிஸக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட கூறுகிறார்.

மு.சோ.கட்சியின் நிர்வாகச் செயலாளர் சமீர கொஸ்வத்த உட்பட எதிர்ப்பாளர்கள் நீண்ட காலம் சிறை வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு பிணை வழங்காமல் இழுத்தடிப்பதற்காக பொலிஸ், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அதிகாரசபையும் சேர்ந்து பொது சொத்துக்களுக்கு பாரிய சேதம் விளைவித்ததாகக் கூறி குற்றம் சுமத்தியிருப்தே இதற்குக் காரணமென நீத அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் புபுது ஜயகொடகுறிப்பிடப்பட்டுள்ளார்.

இதனால், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள 5 எதிர்ப்பாளர்களில் மூவருக்கு கொரோனா தொற்றியிருப்பதாகவும், அவர்கள் முறைப்படி தனிமைப்படுத்தலில் வைக்கப்படவில்லையெனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாத்திரமல்ல, சிறைச்சாலைகளின் கொள்ளளவுக்கு மேல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை மனித உரிமைகளை மீறும் செயலாகுமெனவும், இவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்ப்பாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக அவசர பேச்சுவார்த்தையொன்றை பெற்றுத் தருமாறும் புபுது ஜயகொட தனது கடிதத்தில் நீதி அமைச்சரிடம் கோரியுள்ளார்.

சிறைச்சாலைகளில் தற்போது ​கொவிட் தொற்று பரவி வருவதன் காரணமாக பிணை வழங்கக் கூடிய அனைத்து கைதிகளுக்கும் பிணை வழங்குமாறு பரிந்துரை செய்யப்பட்டிருந்தாலும், திட்டமிட்டு பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி பிணை வழங்குவதை தடுத்திருப்பதாகவும் புபுது ஜயகொட எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி