களுபோவில வைத்தியசாலையின் வார்டுகளில் கொவிட் வைரஸால் இற்தவர்களின் உடல்களைக் காட்டும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட ஒருவர் 23ம் திகதி பொலிஸ் துறையின் கணினி குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் போலியானவையென பொலிஸார் கூறுகின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேச நபர் நேற்று முன்தினம் (23) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் ஒரு லட்ச ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், டிசம்பர் 16ம் திகதி நீதமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தவிடப்பட்டுள்ளது.

இந்த நபருக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ், இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் கணினி குற்றச் செயல் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்படவிருப்பதாக பொலிஸார் கூறுகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி