இலங்கை அரசியலில் ஒரு புரட்சிகரமான நபர் கிங் மேக்கர் என்று அறியப்பட்ட சர்ச்சைக்குரிய நபரான மங்கள சமரவீர இன்று (ஆகஸ்ட் 24) கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

கொவிட் -19 தொற்றுக்குள்ளான அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

மங்கள சமரவீர தனது தைரியமான அறிக்கைகள் மற்றும் இனம், மதம் மற்றும் பாலினம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து இனங்கள் மற்றும் தனிநபர்களின் சமத்துவத்திற்கான அவரது பணிக்காக அடிக்கடி சர்ச்சைக்குரிய நபராக விவரிக்கப்பட்டார்.

"குழந்தைகளே, பெற்றோரை வணங்குங்கள்! ஆசிரியர்களை வணங்குங்கள்! ஆனால் அரசியல்வாதிகளை வணங்காதீர்கள்! நீங்கள் அவர்களை வணங்கக்கூடாது" என்று மங்கள சமரவீர சமீபத்திய அறிக்கையில் கூறினார்.

புத்தர் சிலையை செங்குத்தாக வைத்திருக்கும் புகைப்படம் வெளியானதைத் தொடர்ந்து அவர் பௌத்த சமூகத்தால் வெறுக்கப்பட்டார்.

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிடம் இருந்து மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவது வரை முக்கிய பங்கு வகித்தவர்களில் மங்களவும் ஒருவர்.

மங்கள சமரவீர தனது தந்தையின் பாரம்பரியத்திலிருந்து அரசியலுக்கு வந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்.

2020 பொதுத் தேர்தலின் போது அவர் தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார், ஆனால் நாட்டிற்கான ஒரு முற்போக்கான அரசியல் பாதைக்கான ஒரு இயக்கத்தை உருவாக்க உழைத்தார். சமீபத்தில் அவர் பல்வேறு சிவில் சமூக குழுக்களின் ஆதரவுடன் "தீவிர மையம்" என்ற இயக்கத்தைத் தொடங்கினார்.

மங்கள பின்சிறி சமரவீர ஏப்ரல் 21, 1956 இல் பிறந்தார் மற்றும் 2005-2007 மற்றும் 2015-2017 வரை வெளிவிவகார அமைச்சராக பணியாற்றினார்.

அவர் 2017 முதல் 2019 வரை வெகுஜன ஊடக மற்றும் தகவல் தொடர்பாடல் அமைச்சராகவும் இருந்தார்.

மங்கள சமரவீர கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி பயின்றார் மற்றும் லண்டன் செயின்ட் மார்ட்டின் கலைக் கல்லூரியில் பிஏ இளமானி பட்டமும், ஆடை வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் பிஏ இளமானி பட்டமும் பெற்றார்.

களனி பல்கலைக்கழகத்தின் வெளிவாரி விரிவுரையாளரான இவர், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பல திருமண வடிவமைப்பு மற்றும் ஜவுளி கண்காட்சிகளை நடத்தியுள்ளார்.

அவர் 1988 இல் இலங்கைக்கு வந்த அவர் அரசியலுக்கு வரும் வரை இலங்கை தேசிய திட்ட மையத்தில் பணியாற்றினார்.

MS List12 1

மங்களவின் தாயார் கேமா லேக் ஹவுஸில் ரணில் விக்கிரமசிங்கவின் தந்தையின் செயலாளராக இருந்த போதிலும், மங்கள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் லண்டன் கிளையின் உறுப்பினராக இருந்தார் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உதவிச் செயலாளர் மற்றும் பொருளாளராகவும் இருந்தார்.

அவரது தந்தை மகாநாம சமரவீர பண்டாரநாயக்க அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தார். அவர் 1952 இல் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்தும் 1956 இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்தும் போட்டியிட்டார். அவர் மாத்தறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

தந்தையின் மரணத்திற்குப் பிறகு அரசியலில் நுழைந்த மங்கள 1989 இல் பாராளுமன்றத்தில் நுழைந்தார், அப்போது எதிர்க்கட்சியின் இளைய உறுப்பினராக இருந்தார், அவர் 1988/89 கலவரத்தின் போது காணாமல் போன இளைஞர்களை பிரதிநிதித்துவப்படுத்திய அமைப்பின் நிறுவனராவார்.

1990 இல் உருவாக்கப்பட்ட தாய்மார்களின் முன்னணியின் நிறுவனர்களில் அவரும் ஒருவர்.

அவரது நெருங்கிய நண்பரான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவர் அரசியலுக்கு வருவதில் பெரும் பங்கு வகித்தார். மற்றும் 1994 இல் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தில் தபால் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தார்.

அவரது தலைமையின் கீழ், அவர் நாட்டின் தொலைத்தொடர்பு சேவைகளில் புரட்சியை ஏற்படுத்தியவர், தொலைபேசிகளுக்கான காத்திருப்பு பட்டியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். நஷ்டத்தில் இருந்த இலங்கை தொலைத்தொடர்பை தனியார்மயமாக்கல் மற்றும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் அவர் முன்னோடியாகவும் இருந்தார்.

மறுசீரமைப்பிற்குப் பிறகு, அவர் அதே அமைச்சரவையில் நகர அபிவிருத்தி கட்டுமாணம் மற்றும் பொது பயன்பாட்டு அமைச்சராகவும் பணியாற்றினார்.

அன்றைய நகர் அபிவிருத்தி அமைச்சில் உள்ள தனது அலுவலகத்தை நவீனமயமாக்க அவர் பெரும் தொகை செலவழித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

 114424406 gettyimages 1128132804

பின்னர் அவர் பிரதி நிதி அமைச்சரானார்.

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் அரசியல் வாழ்க்கையின் 30 வது ஆண்டு நிறைவு

"தேசத்தை நேசித்த ஒரு சிறந்த தலைவர்"

தாராளவாத சிந்தனையாளரான மங்கள, 1995 ஆம் ஆண்டில் 'வெள்ளை தாமரை' இயக்கத்தின் மூலம் ஒரு அரசியல் தீர்வை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார், இது நாட்டில் வகுப்புவாதப் போரை நோக்கிய அமைதியான நடவடிக்கைக்கு உறுதியளித்தது. அதன் மூலம் புதிய அரசியலமைப்பு வரைவு கொண்டுவரப்பட்டது.

2001 முதல் 2004 வரை, அவர் எதிர்க்கட்சியின் தலைமைப் பொறுப்பாளராகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளராகவும் இருந்தார். 2004 இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, அவர் துறைமுகங்கள், விமானப் போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சராக இருந்தார்.

அவர் துறைமுக அமைச்சராக இருந்த காலத்தில், பல சந்தர்ப்பங்களில் கொழும்பு காலி முகத்திடலை அழகுபடுத்துவதற்கு முன்னுரிமை அளித்தார்.

அவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் நெருங்கிய நண்பராக இருந்தார். மற்றும் 2005 இல் ஜேவிபியுடன் இணைந்து மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தார் மற்றும் அந்த அரசாங்கத்தில் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

எனினும், 2007 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அவர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார்.

பின்னர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபதி சூரியாராச்சியுடன் அரசாங்கத்தை விட்டு விலகி, எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்த மங்கள, 2015 இல் 'நல்லாட்சி அரசாங்கத்தை' உருவாக்கும் ஆர்வலராக இருந்தார். அவர் அந்த அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சராகவும் பின்னர் நிதி அமைச்சராகவும் இருந்தார்.

மங்கள சமரவீரவின் மறைவுக்கு உலகத் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது ட்வீட்டரில் "எனது நண்பரும் சக ஊழியருமான மங்கள சமரவீரவின் அகால மரணத்தால் நான் மிகவும் வருத்தப்படுகிறேன். இந்த தேசத்தை நேசித்த ஒரு சிறந்த தலைவரை இன்று நாம் இழந்துவிட்டோம். இலங்கை மற்றும் அவரது குடும்பத்திற்கு அவர் செய்த சேவைக்கு நன்றி. அவர் முழுமையான மோட்சத்தை அடையட்டும்!" என்று கூறியிருந்தார்.

mahinda PM

இதற்கிடையில், மாலை​தீவின் முன்னாள் ஜனாதிபதியும் சபாநாயகருமான மொஹமட் நஷீத், "மங்களவின் மறைவுடன், தெற்காசியா ஒரு தலைமுறையின் சிறந்த அரசியல் மனநிலையை இழந்தது. இலங்கையின் வெளியுறவு அமைச்சராகவும் பின்னர் நிதியமைச்சராகவும், அவர் இலங்கை மற்றும் அதற்கு அப்பாலும் தனது உறுதிப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தினார்."

mohonade

அமெரிக்காவின் தூதர் அலைனா பி. டெப்லிட்ஸ், "மங்கள சமரவீரவின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் இலங்கை மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் - மங்கள சமரவீர ஒரு தேசபக்தர், மற்றும் தலைவர். அமைதி மற்றும் ஜனநாயகத்தின் மீதான அவரது ஆர்வம் அழிக்க முடியாத உத்வேகம்" என்று கூறினார்.

usa

(பிபிசி சிங்கள சேவை)

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி