முன்னாள் அமைச்சர் மகாநாம சமரவீர மற்றும் கேமா பத்மாவதி சமரவீர ஆகியோருக்கு ஏப்ரல் 21, 1956 பிறந்த மங்கள சமரவீர இன்று 65 வயதும் 4 மாதமும், 3 நாட்களும் பூர்த்தி அடைந்த நிலையில் அவரின் இறுதி பயணத்தை மேற்கொண்டார் அவர் தனது வாழ்க்கையை மட்டுமல்ல, நமது வருங்கால அரசியலில் எஞ்சியிருக்கும் கடைசி நம்பிக்கையையும் விட்டுச் செல்கிறார்.

மங்கள சமரவீர தனது ஆரம்பக் கல்வியை மாத்தறை ராகுல கல்லூரியிலும் உயர் கல்வியை கொழும்பு ரோயல் கல்லூரியிலும் பின்னர் லண்டன் வோல்டம் கொரஸ் கல்லூரியிலும் பயின்றார். பின்னர் அவர் லண்டனில் உள்ள சென் மார்ட்டின் கலைக் கல்லூரியில் ஆடை வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் அவர் இலங்கையின் தேசிய திட்டமிடல் மையத்தில் வடிவமைப்பு ஆலோசகராகவும் களனி பல்கலைக்கழகத்தின் அழகியல் ஆய்வுப் பிரிவில் வெளிவாரி விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவர் சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் அனுர பண்டாரநாயக்க ஆகியோரின் வேண்டுகோளின் பேரில் மங்கள சமரவீர அரசியல் களத்தில் இறங்கினார், அவர் 1983 கறுப்பு ஜூலையில் மனிதர்கள் கொல்லப்படுவதைக்கண்டு அதற்கு எதிராக சமூக நல்லிணக்கத்தை உருவாக்க விரும்பினார்.

மங்கள சமரவீர 1988 இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை தொகுதி அமைப்பாளராகப் பொறுப்பேற்றார், அன்றிலிருந்து தனது கடைசி பயணம் வரை தனது சொந்த முயற்சியின் அரசியல் கொள்கை, தொலைநோக்கு மற்றும் திட்டம் கொண்ட ஒரு அரசியல் நபராக இருந்தார்.

1989 இல் பாராளுமன்றத்திற்கு முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மங்கள, 2020 வரை தொடர்ந்து 31 ஆண்டுகளாக தனது அரசியல் கொள்கையை மீறாத ஒரே நடைமுறை அரசியல்வாதி ஆவார். இது ஏப்ரல் 3, 1989 அன்று இலங்கையின் பாராளுமன்றத்தில் தனது முதல் பாராளுமன்ற உரையிலிருந்து 20 பெப்ரவரி 2020 அன்று பாராளுமன்றத்தில் தனது கடைசி உரை வரை பாராளுமன்ற ஹன்சார்ட் அறிக்கையும் சாட்சியமளிக்கும்.

மங்கள சமரவீர பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ​​இந்த நாட்டின் அரசியல் மிகவும் குழப்பமானதாக இருந்தது. தேசபக்தி வற்புறுத்தல் மற்றும் அரச பயங்கரவாதம் நாட்டில் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் உயிரைக் கொன்றது. இத்தகைய பின்னணியில், பாலங்கள், மதகுகள், நெடுஞ்சாலைகள்,கட்டிடங்களின் அரசியலுக்கு பதிலாக நீதி மற்றும் நியாயத்திற்காக போராடும் சமூக ஜனநாயகத்தின் பாதுகாவலர் நாட்டிற்கு தேவை என்ற கருத்திட்டத்தின் ஊடாக மங்கள சமரவீரவின் அரசியல் பார்வை மற்றும் அரசியல் நடைமுறை பொது எதிர்பார்ப்புகளுடன் புணரமைக்கப்பட்டது.

அரச பயங்கரவாத காலத்தில் அனைத்து வகையான கொலை மற்றும் கடத்தல்களுக்கு எதிராக போராடிய மங்கள சமரவீர, தாய்மார்களை இணைத்து மவ் பெரமுன (தாய்மார்களின் முண்ணனி) என்ற அமைப்பை உருவாக்கினார், இது சட்டத்தை மீறிய ஒரு நாட்டில் பிள்ளை​களை இழந்த தாய்மார்களை ஒன்றிணைத்து நாட்டை ஆட்சி செய்தவர்களின் அநீதி நிரூபிக்கப்பட்டது. மங்கள சமரவீரவுடன், மஹிந்த ராஜபக்ஷவும் இணைப்பாளராக இருந்தார்.

ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவுடன் இணைந்து, இலங்கையில் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், தேசங்களுக்கிடையே அமைதியைக் கட்டியெழுப்பவும், யாழ்ப்பாண நூலகத்தை 'புத்தகம் மற்றும் செங்கல்' மூலம் கட்டியெழுப்பவும் 'வெள்ளைத் தாமரை இயக்கத்தை' மேற்கொண்டார்.

மேலும், நாட்டில் தொலைத்தொடர்புத் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்ய துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்த மங்கள சமரவீர, தொலைத்தொடர்பு நிறுவனத்தை தனியார்மயமாக்க நடவடிக்கை எடுத்தார். அதே நேரத்தில், நகரத்தை அழகுபடுத்துவதில் ஒரு புதிய பரிமாணத்தை சேர்த்தல், கொழும்பு நகரின் வளர்ச்சி மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமாணத்திற்கு தேவையான ஆரம்பம் மங்களவின் அரசியலின் அடையாளங்களாக இருந்தன.

2025' விஷன் நடைமுறைத் திட்டங்கள் மூலமாக 'கம்பெரலிய' மற்றும் 'எண்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா' போன்ற, எதிர்கால வளர்ச்சி இலக்குகளுக்கான  பாதையில் நீல-பசுமை பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு பொதுமக்களுக்கு எதிர்காலத்திற்கான புதிய நம்பிக்கையை அளிக்க முடிந்தது.

மங்கள சமரவீரவின் அரசியல் பயணம் சுருக்கமாக ...

1989/02/15 - முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்

16/08/1994 அன்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு தபால் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

பின்னர் அவர் நகர அபிவிருத்தி அமைச்சரவை அமைச்சராகவும் பிரதி நிதி அமைச்சராகவும் பணியாற்றினார்.

2001 இல் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் தலைமைப் பொறுப்பாளராக இருந்த மங்கள சமரவீர, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளராகவும் இருந்தார்.

அந்த நேரத்தில் அவர் துறைமுகங்கள் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சராகவும், வெகுஜன ஊடக அமைச்சராகவும் இருந்தார்.

2005 ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவின் பிரச்சார இணைப்பாளராக இருந்த மங்கள சமரவீர, மகிந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

மங்கள சமரவீர 2007 ஜனவரியில் துறைமுகங்கள் மற்றும் விமானத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் 2007 பெப்ரவரி 7 அன்று அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார்.

பின்னர் அதுவரை அவர் ஈடுபட்டிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி ஸ்ரீபதி சூரியராச்சியுடன் இணைந்து (ஸ்ரீலங்கா சுதந்திர மக்கள் கட்சியை) ​உருவாக்கினார்.

மங்கள சமரவீர, சட்டவிரோத காணாமல் போதல், அரச சொத்துக்களை அபகரித்தல் மற்றும் தன்னிச்சையான ஆட்சிக்கு எதிராக இருந்தார்  ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் ஐ.தே.கவுடன் தனது அரசியலை தொடர்ந்தார்.

அதன்படி, அதுவரை மகிந்த ராஜபக்ச ஆட்சியை எதிர்த்த மங்கள சமரவீர, வரலாற்று சிறப்புமிக்க 2015 ஜனவரி 8 அரசியல் வெற்றியில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார்.

அவர் பின்னர் வெளியுறவு அமைச்சராக மீண்டும் நியமிக்கப்பட்டார், பின்னர் நிதி அமைச்சராகவும், வெகுஜன ஊடக அமைச்சராகவும் பணியாற்றினார்.

இந்த நாட்டை ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்ட வளர்ந்த நாடாக உருவாக்குவது அவரின் கனவனாக இருந்தது.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி