ஜனாதிபதி நேற்று (09) காலை அமைச்சரவை மாற்றத்தை செய்யவிருந்த போதிலும், அவசரநிலை காரணமாக அது ரத்து செய்யப்பட்டது.உள்நாட்டு வட்டாரங்களின்படி, அரசாங்கம் அவ்வாறு செய்ய முடிவு செய்துள்ளது.

அமைச்சரவை மாற்றத்தின் படி, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் வெளிநாட்டு அமைச்சராகவும்,தினேஸ் குணவர்தன உயர்கல்வி அமைச்சராகவும்,பிரசன்ன ரணதுங்க கல்வி அமைச்சராகவும்,பவித்ரா வன்னியாராச்சி மின்வலுத்துரை அமைச்சராகவும் வைத்தியர் ரமேஸ் பத்திரன சுகாதார அமைச்சராகவும,ஹெகலிய ரம்புக்வெல்ல கைத்தொழில் அமைச்சராகவும்,டலஸ் அலகப்பெரும ஊடகத்துரை அமைச்சராகவும் நியமிக்கப்படவிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுற்றுலாத்துரை அமைச்சு பற்றி இங்கு குறிப்பிடப்படவில்லை.உயர்கல்வி அமைச்சர் பதவிக்கு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும், உயர்கல்வி அமைச்சு மொட்டு கட்சிக்கு கொடுக்கப்பட வேண்டும் என்று கட்சியின் பிரபலமான ஒருவரின் அழுத்தம் காரணமாக தினேஷ் குணவர்த்தனவுக்கு கொடுக்கப்படவிருந்த அமைச்சுப்பதவிக்கு சிக்கல் ஏறபட்டுள்ளது.

சரத் ​​வீரசேகர மாற்றியமைக்கப்படுவார் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், நேற்று நடைபெற உள்ள பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

கொவிட் தொற்றுநோய் சூழ்நிலையில் பொதுக் கூட்டங்களைக் கட்டுப்படுத்தும் ஜனாதிபதியின் நிபுணர் குழுவின் ஆலோசனையின் பேரில் இந்த அமைச்சரவை மாற்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜனாதிபதி கலந்து கொள்ளும் எந்த சந்திப்பிற்கு முன்பும் சுகாதார அதிகாரிகள் குழு பங்குபற்றும் நபர்களுக்கு கொவிட் ஆன்டிஜென் சோதனையை நடத்தும். இதன்படி கூட்டத்தில் கலந்துகொள்ளவிருந்த ஐந்து அதிகாரிகள் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதால் ஜனாதிபதி சந்திப்பிற்கு கட்டுப்பாடு விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட ஆதாரங்களின்படி, ஜூம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நேற்று அமைச்சரவைக் கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி