கிழக்கு மாகாணத்தில் உள்ள ராஜாங்க அமைச்சரின் மெய்பாதுகாவளர் செய்ததாகக் கூறப்படும் கொலை தொடர்பான விசாரணைகளை சிஐடியிடம் ஒப்படைக்குமாறு பொலிசார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாலேந்திரனின் பாதுகாவலர் ஜூன் 21 ம் திகதி மகாலிங்கம் பாலசுந்தரம்  என்பவரை மட்டக்களப்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டின் முன்னால் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த கொலையில் மட்டக்களப்பு பொலிசார் எந்த அக்கறையும் காட்டவில்லை என்று குற்றம் சாட்டிய பாலசுந்தரத்தின் குடும்ப உறுப்பினர்கள், கொலை விசாரணை நியாயமாக நடத்தப்பட வேண்டுமெனில் வேறு பொலிஸ் நிலையத்திற்கு மாற்றுமாறு கடந்த வழக்கில் கோரிக்கை விடுத்தனர்.

திங்கள்கிழமை (ஆகஸ்ட் 09) மாவட்ட நீதிபதி ஏசி ரிஸ்வான் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​மட்டக்களப்பு பொலிசார் நீதிமன்றத்திற்கு தகவல் அளித்து, அப்பகுதியின் டிஐஜி சுதத் மாரசிங்க விசாரணையை சிஐடியிடம் ஒப்படைக்க தனக்கு அதிகாரம் இல்லை என்றும் அப்படி விசாரணையை சிஐடியிடம் ஒப்படைக்க வேண்டுமாக இருந்தால் பொலிஸ்மா அதிபர் தனக்கு எழுத்துபூர்வமாக அறிவிக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கடிதத்தின் நகல் நீதிபதி ஏசி ரிஸ்வானிடம் பொலிசாரினால் ஒப்படைக்கப்பட்டதாக மாகாண நீதிமன்ற செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இந்த வழக்கு ஆகஸ்ட் 23 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருக்கிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி