கல்வியை இராணுவமயமாக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் முன்னணி தலைவர்களை சிறையில் அடைக்க இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரச மற்றும் தனியார் துறைகளில் பல முன்னணி தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

ஓகஸ்ட் 3ஆம் திகதி நாாடாளுமன்றத்திற்கு அருகில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட பல தலைவர்கள் ஏற்கனவே சட்டவிரோதமாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொது சொத்து மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.

"தொழிலாளர் போராட்ட  நிலையத்தின் சமீர கொஸ்வத்த, கோஷிலா, அனைத்துப் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று திரும்பிக்கொண்டிருந்த அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே, ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் அமில சந்தீப ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்."

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே, ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் அமில சந்தீப ஆகியோர் ஓகஸ்ட் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சிவில் உடையில் வந்த குழு மற்றும் ஒரு சீருடை அணிந்த  அதிகாரி ஆகியோர் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வசந்த முதிலிகே கைவிலங்கு மாட்டி அழைத்துச் சென்றதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. கடத்தப்பட்டு ஒரு நாள் காணாமல் போன அமில சந்தீப காவலில் இருப்பதை பொலிஸார் பின்னர் வெளிப்படுத்தினர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரான அமிந்த லக்மல் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது, தங்காளை பொலிஸ் என அறிமுகப்படுத்திய ஒரு குழு அவரை கடத்த முயன்றுள்ளதோடு, மாணவர்கள் உள்ளிட்டவர்களின் எதிர்ப்பினை அடுத்து தடுக்கப்பட்டதாக, சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

பொலிஸ் உளவாளிகள்

100 வருடங்களுக்கு மேல் புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட இலங்கை தோட்ட  சேவையாளர் சங்கத்தின் தலைவரும் பொது சொத்து மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் தலைவரும் இணை ஏற்பாட்டாளருமான சத்துர சமரசிங்கவிற்கும் பொலிஸாரின் காவல்துறை ஒடுக்குமுறை இடம்பெற்று வருவதாக, பொது சொத்து மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மையம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

fdrbvb

தொழிற்சங்கத் தலைவரை பொலிஸ் உளவாளிகள் பின்தொடர்வதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

"அவரது வீட்டுக்கு வருகைதந்து வீட்டில் இருப்பவர்களை அச்சுறுத்துவதோடு, பணியபாற்றும்  இடங்களைக் கண்டறிய பொலிஸ் உளவாளிகள் அனுப்பப்படுகின்றார்கள“ என கடந்த 3ஆம் திகதி பேரணியில் உரையாற்றிய சதுர சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு பதிலாக, போராட்டக்காரர்களை கைது செய்து நாட்டு சிறுவர்களின் முழு கல்வியையும் அழிக்க முயல்வதாக, பொது உடைமை மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மையம் குற்றம் சாட்டுகிறது.

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பல்கலைக்கழக அமைப்பை ஒழுங்குபடுத்தும் பல்கலைக்கழகங்கள் சட்டம் 1978 எண் 16 ஐ இரத்து செய்து, அரசாங்கம் கொத்தலாவல பல்கலைக்கழக சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முயற்சிக்கிறது.

தொழிற்சங்கங்கள், சிவில் சமூக அமைப்புகள், கலைஞர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உட்பட பொதுமக்கள் ஏற்கனவே அரசாங்கத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையாக போராடி வருகின்றனர், கல்வியை இராணுவமயமாக்கும் முயற்சி உட்பட தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் உட்பட பலரை கைது செய்ய  அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, பொதுச் சொத்து மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

அரசாங்கத்தின் இந்த செயல்முறை கருத்து சுதந்திரத்திற்கான ஜனநாயக உரிமைகளுக்கு விழுந்த ஒரு அபாயகரமான அடி எனவும், கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் போராட்டங்களில் ஈடுபடும் மக்கள் மீதான அரசாங்கத்தின் அடக்குமுறையை தனது அமைப்பு வன்மையாகக் கண்டிப்பதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

போராட்டங்களை ஒடுக்குவதற்கான அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், உச்சபட்ச நடவடிக்கை எடுக்கவும், கீழே குறிப்பிடப்பட்டுள்ள அமைப்புகளை உள்ளடக்கிய பொது சொத்து மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மையம், நிபந்தனையின்றி   தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்ததுள்ளது.

இலங்கை வங்கி ஊழியர் சங்கம் (CBEU), இலங்கை வர்த்தகம் மற்றும் தொழில் மற்றும் பொது தொழிலாளர் சங்கம் (CMU), ஊடக தொழிலாளர் தொழிற்சங்க கூட்டமைப்பு (FMETU), இலங்கை தோட்ட சேவையாளர்  சங்கம் (CESUD), ஐக்கிய தொழிலாளர் கூட்டமைப்பு (UFL), தபால் மற்றும் தொலை தொடர்பு அதிகாரிகள் தொழிற்சங்கம் (UPTO), இலங்கை தொழில்முறை ஊடகவியலாளர் சங்கம் (SLWJU), ஐக்கிய பொது சேவைகள் சங்கம் (CCMU), வணிக மற்றும் தொழில்துறை தொழிலாளர் சங்கம் (CIWU), காப்புறு தொழிலாளர் சங்கம் (IEU), தகவல் மற்றும் தொலை தொடர்பு அனைத்து ஊழியர் சங்கம் (AEUIT), இலங்கை ஆசிரியர் சங்கம் (CTU), ரயில்வே தர தொழிற்சங்கக் கூட்டமைப்பு (RPTUA), தொலைத்தொடர்பு பொறியியல் டிப்ளோமோதாரிகள் சங்கம் (TEDA), உணவு, பானம் மற்றும் புகையிலைத் தொழிலாளர் சங்கம் (FBTIE), சுயாதீன தடாகத் தொழிலாளர் சங்கம் (IDWU), தேசிய சுதந்திர தொழிற்சங்கம், அச்சக ஊழியர்கள் சங்கம், இலங்கை பெருந்தோட்ட சேவையாளர் சங்கம் (CPSU), நிலம் மற்றும் விவசாய சீர்திருத்த இயக்கம் (MONLAR) மற்றும் PROTECT ஆகியன பொது சொத்து மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்துடன் தொடர்புடைய தொழிற்சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி