கல்வியை இராணுவமயமாக்குவதற்கு எதிர்ப்பு உட்பட பல கோரிக்கைகளின் அடிப்படையில் நாட்டின் இரண்டு முன்னணி ஆசிரியர் சங்கங்கள் யாழ்ப்பாணத்தில் இரண்டு இடங்களில் போராட்டங்களை நடத்தியுள்ளன.

ஆகஸ்ட் 09 (இன்று) திங்கட்கிழமை இலங்கை ஆசிரியர் சங்கம் யாழ்ப்பாணத்தில் போராட்டத்தை ஆரம்பித்தது.இலங்கை ஆசிரியர் சேவை ஒன்றியம் பருத்தித்துறையில் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை உடனடியாக தீர்க்கக் கோரி இலங்கை ஆசிரியர் சங்கம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக கண்டன ஊர்வலத்தை தொடங்கியுள்ளது.

வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பல தடவைகள் பொலிசார் இடையூறு ஏற்படுத்தியதாக மாகாண செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

அவர்கள் மேலும் கூறுகையில், யாழ்ப்பாணம் உட்பட வட மாகாணத்தில் இருந்து ஏராளமான ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாக தெறிவித்தனர்.

பருத்தித்துறையில் இருந்து ஆரம்பமான இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் கண்டன ஊர்வலம் பருத்தித்துறை பேருந்து நிலையத்தை அடைந்ததும் போராட்டம் முடிவுற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும் கலந்து கொண்டதாக மாகாண செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், ஆசிரியர் அதிபர்களுக்கான சம்பள முரண்பாடுகளுக்குத் தீர்வு காணக் கோரி நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள அதன் உறுப்பினர்களை தன்னிச்சையாக கைது செய்வதை நிறுத்துமாறு ஆசிரியர் அதிபர்கள் தொழிற்சங்கக் கூட்டணி இன்று பொலிஸ் மா அதிபருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

Teachers in Jaffna 5Teachers in Jaffna 2Teachers in Jaffna 4Teachers in Jaffna 3Teachers in Jaffna 1

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி