நேற்றையதினம் ஆரம்பத்தில் 94 பேர் கொரோனாவுக்கு பலியானதாக தெரிவிக்கப்பட்டது.பின்னர் சிறிது நேரத்தில் மேலும் 17 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்திருந்தது.

அதன்படி, நேற்று மாத்திரம் 111 பேர் உயிரிழந்துள்ளதுடன் நாட்டில்

இலங்கையில்  கடந்த 5 நாட்களில் 495 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர் .

08.ஆகஸ்ட் - 111 மரணங்கள்

07.ஆகஸ்ட்  - 94 மரணங்கள்

06.ஆகஸ்ட்   - 98 மரணங்கள்

05.ஆகஸ்ட்    -98 மரணங்கள்

04.ஆகஸ்ட்    - 94 மரணங்கள்

இன்னும் சில நாள்களில் நாட்டில் அன்றாடம் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5,000 ஐ கடக்கும். அத்துடன், நாளொன்றுக்கு இடம்பெறும் மரண எண்ணிக்கை ஆகக் குறைந்தது 200 ஆக இருக்கும் என்றும் வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடு, தற்போது முகங்கொடுத்து கொண்டிருக்கும் நிலைமை, இன்னும் இரண்டொரு வாரங்களில் பன்மடங்குகளால் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் மேலும் 1,928 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 331,922 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 295,518 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,222 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வாரத்துக்குள் நாட்டில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளும் கொவிட் -19 சிகிச்சை வைத்தியசாலைகளாக மாற வாய்ப்புள்ளதாக, அரச மருந்தாக்கல் கூட்டுத் தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி