ஜூட் குமார் இசாலினி பணிப்பெண்ணாக வேலை செய்யும் போது தீக்காயங்களுடன் இறந்தது தொடர்பாக கைது செய்யப்பட்டார்.

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மனைவி உட்பட நான்கு பேரின் பினை மனுவை கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜெயசூர்ய நிராகரித்து, அவர்களை இம்மாதம் 23 ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

அதன்படி, முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மனைவி, அவரது தந்தை, அவரது சகோதரர் மற்றும் சிறுமியை அழைத்து வந்து ஒப்படைத்த தரகர் உள்ளிட்டோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சட்டமா அதிபர் சார்பாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப்ப பீரிஸ் விடுத்த கோரிக்கையை கருத்தில் கொண்டு நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இந்த சம்பவம் தொடர்பான முக்கிய உண்மைகள் நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிப்பதற்கு முன்பு ஊடகங்களில் எப்படி வெளியிடப்பட்டது என்பது குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

மற்றொரு வீடியோ!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது உயிரிழந்த இசாலினியின் மரணம் சமூகத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இசாலினி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த போது இசாலினியின் தாயார் மற்றும் ரிஷாத் பதியுதீனின் மனைவியின் நட்பு உரையாடலின் வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இஷாலினி அவரின் வயதை விடவும் தோற்றமுடையவர் என்று அந்த வீடியோவில் அவரது தாயாரால் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், சில அரசியல்வாதிகள் இப்போது இஷாலினியின் தாயாரை அரசியல் நோக்கங்களுக்காக கையாள்வதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி