நாளொன்றுக்கு கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,300 ஐ தாண்டியுள்ள நிலையில் ஆகஸ்ட் 2 ஆம் திகதி முதல் அரசு ஊழியர்கள் மீண்டும் வேலைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் செயலாளர் பி.ஜயசுந்தர அனைத்து அரச ஊழியர்களையும் வழக்கம் போல் சுற்றறிக்கை அடிப்படையில் வரவழைத்து வீட்டிலிருந்து கடமைகள் தொடர்பாக வழங்கப்பட்ட அனைத்து சுற்றறிக்கைகளையும் ரத்து செய்யுமாறு பணித்துள்ளார். இது பொது சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜெ. ரத்னசிறிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரும்பான்மையான அரச ஊழியர்களுக்கும் ,பொதுமக்கள் தொகையில் அனேகமானோருக்கும் கொவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) நோய் பரவுவதால் மாதத்திற்கு 4,000 முதல் 4,500 வரையான இறப்புகள் பதிவாக வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.

நாட்டைத் திறப்பது மிகவும் கவனமாக செய்யப்பட வேண்டிய ஒன்று. கொவிட்  தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் ஐம்பது சதவீதம் பேர் இன்னும் ஒக்ஸிஜனை நம்பியிருக்கிறார்கள் ”என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே கூறினார்.

தேசிய மருத்துவமனையும் கொவிட் நோயாளிகளால் நிரம்பியுள்ளது. குறிப்பாக குழந்தைகள் மருத்துவமனையும் பாதிக்கப்பட்ட குழந்தைகளால் நிரம்பியுள்ளது.வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் தங்களால் முடிந்ததைச் செய்கிறார்கள். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 50 இறப்புகள் நிகழ்கின்றன. இது ஒரு ஆபத்தான நிலை. போரின் போது கூட இது நடக்கவில்லை என்று வைத்தியர் பிரசாத் கொலம்பகே எச்சரிக்கிறார்.

அரசு பொது ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்யத் தயாராகி வரும் நிலையில், பொதுச்சுகாதார சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன, ஊடகங்கள் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்,கொவிட் தொற்றுநோய் எதிர்காலத்தில் மோசமடையக்கூடும் என அவர் கூறினார்.

இப்போது இருப்பது அப்படியான அபாயகரமான சூழ்நிலையின் ஆரம்பம் என்று அவர் மேலும் வலியுறுத்துகிறார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி