Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

34 வருடங்களின் பின் கோயில் வழிபாட்டில் ஈடுபட்ட வலி. வடக்கு மக்கள்

T

The Leader Desk

மார்ச் 2, 2024 • 4:37 AM

34 வருடங்களின் பின் கோயில் வழிபாட்டில் ஈடுபட்ட வலி. வடக்கு மக்கள்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கடந்த மாதம் 23ஆம் திகதி குறித்த உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள ஆலயங்களை தரிசித்து பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு இராணுவ பாதுகாப்பு தலைமையகத்தினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
  • குறித்த ஆலயங்களுக்கு சென்று வருவதற்கு இராணுவத்தின் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் கோயிலுக்கு சென்று பூஜை வழிபாடுகளில் மாத்திரம் ஈடுபட்டு திரும்புவதற்காக அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினமும் 30இற்கும் மேற்பட்ட மக்கள் வருகைதந்திருந்தனர்.
  • அதன் இரண்டாவது நாளாக நேற்றைய தினம் கட்டுவன் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் மற்றும் மானம்பிராய் பிள்ளையார் ஆலயம் ஆகியவற்றிற்கு சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு இராணுவத்தினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
எழுத்து அளவு:

கடந்த மாதம் 23ஆம் திகதி குறித்த உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள ஆலயங்களை தரிசித்து பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு இராணுவ பாதுகாப்பு தலைமையகத்தினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

அதன் இரண்டாவது நாளாக நேற்றைய தினம் கட்டுவன் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் மற்றும் மானம்பிராய் பிள்ளையார் ஆலயம் ஆகியவற்றிற்கு சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு இராணுவத்தினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இப்பகுதியிலிருந்து 1990ஆம் ஆண்டு தீபாவளி நாளில் இராணுவ நடவடிக்கை காரணமாக தாம் அவ்விடத்தை விட்டு இடம்பெயர்ந்து சென்று தற்போது 34 வருடங்களின் பின்னர் இவ்வாலயத்தை வந்தடைந்து தற்போது தரிசிக்கும் வாய்ப்பினை இராணுவத்தினர் ஏற்படுத்தியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக ஆலயத்தின் பூசகர் தெரிவித்தார்.

குறித்த ஆலயங்களுக்கு சென்று வருவதற்கு இராணுவத்தின் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் கோயிலுக்கு சென்று பூஜை வழிபாடுகளில் மாத்திரம் ஈடுபட்டு திரும்புவதற்காக அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினமும் 30இற்கும் மேற்பட்ட மக்கள் வருகைதந்திருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பொதுமக்கள் தமது ஆலயங்கள், ஆலய சூழலை அண்டிய தமது காணிகள் என்பவற்றை வெகு விரைவில் விடுவித்து தாம் குடியமர்வதற்கு ஏற்றவாறு அவற்றை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...