X-press Pearl கப்பலில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தாமல் இலங்கை துறைமுக அதிகார சபையின் அதிகாரிகள் அதை பரவ இடமளித்ததாக கப்பல் கெப்டனின் சார்ப்பாக தோற்றிய சட்டத்தரணிகள் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் கூறியுள்ளதாக The Morning பத்திரிகை தெரிவித்துள்ளது.

கப்பலின் கெப்டன் நேற்று கைது செய்யப்பட்டு கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டிருந்தார்.

கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான இழப்பீடை பெறும் நோக்கத்திலேயே இலங்கை துறைமுக அதிகார சபையின் அதிகாரிகள் இவ்வாறு செயற்பட்டதாக கெப்டனின் சார்ப்பில் தோற்றிய சட்டத்தரணிகள் கூறியுள்ளனர்.

சட்டத்தரணிகள் தொடர்ந்து விளக்கமளிக்கையில், கப்பல் தீ பற்றியுள்ளது தொடர்பில் கப்பலின் கெப்டன் கடந்த மே 20ம் திகதி இலங்கை துறைமுக அதிகார சபைக்கு அறிவித்துள்ளதாகவும், மாலை 4.30 மணிக்கு துறைமுக அதிகார சபையின் அதிகாரிகள் கப்பலில் ஏறி ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியுள்ளதாகவும் கூறினர்.

இந்த வழக்கு எதிர் வரும் ஜூலை 1ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி