சில உள்ளூராட்சிமன்றங்களின் அதிகாரங்களைத் தவறவிட்டிருந்தாலும், அதிகப்படியாக
உள்ளூராட்சிமன்றங்களின் அதிகாரங்களைக் கைப்பற்றி, ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே வெற்றி பெற்றுள்ளதென்று, அக்கட்சி அறிவித்தது.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகள் பெருமளவில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், திசைக்காட்டி அரசாங்கத்தின் விசேட ஊடகச் சந்திப்பொன்று, கொழும்பில் தற்போது நடத்தப்பட்டு வருகிறது.
அதில் கலந்துகொண்டு உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், திசைக்காட்டியினால் தவறவிடப்பட்ட உள்ளூராட்சிமன்றங்களில், எதிர்க்கட்சிகளால் ஆட்சியமைக்க முடியாது. அவ்வாறு ஆட்சியமைக்க வேண்டுமாயின், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஆட்சியமைக்க வேண்டும். அவ்வாறானதொரு நிலைமை இங்கு இல்லை. உண்மையில் இந்த விடயத்தில், திசைக்காட்டியை அல்ல, எதிர்க்கட்சிகளைத்தான் மக்கள் புறக்கணித்துள்ளனர். அதனால், இந்தத் தேர்தலிலும் திசைக்காட்டியே வெற்றிபெற்றுள்ளது” என்றார்.