கொவிட் தடுப்பிற்கு முதலாவது தடுப்பூசியாக எஸ்ட்ரா ஷெனெகா (கொவிபீல்ட்) பெற்றுக் கொண்ட இலங்கையர்களுக்கான இரண்டாவது டோஸ் பைஷர் பயோடெக் தடுப்பூசியை பயன்படுத்த தயாராவதாக செய்திகள் கூறுகின்றன.

இது சம்பந்தமான தொழில்நுட்பக் கமிட்டியின் அறிக்கை சம்பந்தமாக தனக்கு அறியத் தருமாறு ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவிடம் கேட்டுள்ளார். முதலாவது தடுப்பூசி பெற்றுக் கொண்ட சுமார் 6 லட்சம் பேருக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்படவில்லை. ஆனால் ‘டெய்லி மிரர்’ செய்தியின்படி, பைஷர் தடுப்பூசிகளை வாங்குவதற்காக கொள்வனவு செய்பவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால் அடுத்த மாதத்திற்குள் 3 லட்சம் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியும்.

ஆனால், எஸ்ட்ராஷெனிகா முதலாவது டோஸ் பெற்றுக் கொண்ட மக்களுக்கு இரண்டாவது டோஸ் வழங்க வேண்டிய காலம் முடிந்துவிடும் என்பதால், இந்த தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதன் ஊடாக வெற்றிகரமான பெறுபேறுகள் கிடைக்குமா என்பதுதான் பிரச்சினை.

அதேபோன்று தற்போது உலக சுகாதார அமைப்புடன் சம்பந்தப்பட்ட நிபுணர்கள் முதலாவது டோஸூக்குப் பின்பு இரண்டாவது டோஸாக பைஷர் தடுப்பூசி பாதுகாப்பானது என அறிவித்துள்ள போதிலும், உலக சுகாதார அமைப்பு தடுப்பூசிகள் கலக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளவில்லை.

அவர்களது தடுப்பூசியை விநியோகிப்பதற்காக வழங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்வது எப்படி என்பது தொடர்பில் பைஷர் அதிகாரிகளுடன் அரச மருந்துக் கூட்டுத்தாபனம் (எஸ்பிசி) நேற்று பேச்சுக்களை நடத்தியுள்ளது.

300,000 டோஸ் பைஷர் தடுப்பூசிகள் அடுத்த மாத நடுப்பகுதியில் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி