எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும் என்ற செய்தியையே 2025 உள்ளூராட்சிமன்றத் தேர்தல்
முடிவுகள் மூலம் மக்கள் அனுப்பியுள்ளனர் என்று, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச கூறுகிறார்.
மக்கள் அளிக்கும் செய்தியின்படி செயல்பட தானும் கட்சியும் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
"எதிர்க்கட்சியின் அனைத்து சக்திகளும் ஒன்றுபட்டு, உண்மையுள்ள மற்றும் வலுவான பொதுச் சேவைக்காக, எதிர்க்கட்சியில் உள்ள அனைவரையும் ஒன்றிணைத்து, பொய்களை முறியடிக்க வேண்டும் என்ற பொதுக் கருத்தையே, நாட்டு மக்கள் எங்களுக்கு அளித்துள்ளனர். அந்த சவாலான பொறுப்பை நிறைவேற்ற நாங்கள் தயாராக உள்ளோம். அதற்கான தலைமையை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்.
“பொதுமக்களின் விருப்பத்திற்கு தலைவணங்கி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து, மக்கள் எதிர்பார்க்கும் பொதுச் சேவையை வழங்குவதும், கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட இந்த ஒற்றுமையின் மூலம் நாட்டு மக்களுக்கு சிறந்த சேவையைச் செய்வதும் எங்கள் நோக்கமாகும். அதற்கான தலைமையை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.