ஆண்களின் எண்ணிக்கை 93.3ஆகக் குறைந்துள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் டொக்டர் சாந்தனி விஜேபண்டார தெரிவித்துள்ளார்.
சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் கடந்த ஆண்டு (2024) நடத்தப்பட்ட சனத்தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பின் ஆரம்பத் தகவல்களைச் சமர்ப்பிப்பதற்காக நேற்று (30 ஆம் திகதி) கொழும்பில் நடைபெற்ற செயலமர்வின்போது இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டன.
ஒவ்வொரு 100 பெண்களுக்கும் இருக்கும் ஆண்களின் எண்ணிக்கை பாலின விகிதம் என்று அழைக்கப்படுவதாகவும் பணிப்பாளர் குறிப்பிட்டார். 2012ஆம் ஆண்டின் கணக்கெடுப்பில் பாலின விகிதம் 93.8ஆக இருந்தது. ஆனால் இந்த கணக்கெடுப்பில் அந்த விகிதம் 93.3ஆகக் குறைந்துள்ளது.
இதன்படி, 2012ஆம் ஆண்டு கணக்கெடுப்பு முதல் 2024ஆம் ஆண்டு கணக்கெடுப்பு வரை பாலின விகிதம் 0.5 சதவீத அலகுகள் குறைந்துள்ளதைக் காட்டுவதாக பணிப்பாளர் தெரிவித்தார். 2024ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, பாலின விகிதம் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் 100இற்குக் குறைவான மதிப்பைக் காட்டுகிறது.
இந்தக் கணக்கெடுப்பில் அதிக பாலின விகிதம் மொனராகலை மாவட்டத்திலும், குறைந்த விகிதம் மட்டக்களப்பு மாவட்டத்திலும் காணப்படுகிறது. அது சதவீத அடிப்படையில் 88.0 ஆகும். 2012 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் மாத்தளை, காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், பதுளை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் பாலின விகிதம் அதிகமாகக் காணப்பட்டது.
பாலின விகிதம் சமூக மற்றும் பொருளாதாரத் துறைகளிலும், நீண்டகால சனத்தொகை ஸ்திரத்தன்மையிலும் தாக்கம் செலுத்தும் ஒரு காரணியாகும் என்றும் அவர் கூறினார்.


