குறைந்துள்ளதாக குடும்ப சுகாதார சேவைப் பணியகம் (Family Health Services Bureau) மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
குடும்ப சுகாதார சேவைப் பணியகம் தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை இந்தக் கணக்கெடுப்பை நடத்தியதுடன், மேற்கூறிய குழந்தைகளில், 11 இலட்சத்து 73 ஆயிரத்து 237 (1,173,237) ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் வளர்ச்சி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
356 சுகாதார மருத்துவ அதிகாரிப் பிரிவுகளை உள்ளடக்கிய 6,918 குடும்ப சுகாதார சேவை அதிகாரிப் பிரிவுகளில், 1,208,769 ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் பதிவு செய்யப்பட்டு இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
இதில் 9,542 (9,542) ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விடக் குறைந்துள்ளதுடன், சதவீத அடிப்படையில் 7.7% ஆக உள்ளது.
கடந்த ஆண்டு தீவிர ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைககளின் எண்ணிக்கை 10,323 ஆகும். இது சதவீத அடிப்படையில் 8.7% ஆக இருந்தது. புத்தளம், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் வாழும் குழந்தைகள் தீவிர ஊட்டச்சத்துக் குறைபாட்டால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி, புத்தளம் மாவட்டத்திலேயே அதிக குழந்தைகள் பதிவாகியுள்ளதோடு, அதன் சதவீதம் 8.7% ஆகும்.


