Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

மரக்கறிகளின் விலை வீழ்ச்சி!

T

The Leader Desk

செப்டம்பர் 30, 2025 • 2:16 AM

மரக்கறிகளின் விலை வீழ்ச்சி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தம்புளை விசேட பொருளாதார வர்த்தக நிலையத்தின் மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
  • தினசரி மொத்த விநியோகம் 15 - 20 லட்சம் கிலோகிராம் வரை அதிகரித்துள்ளமையே இவ்வாறு விலை குறைவதற்கான பிரதான காரணம் என தம்புளை விசேட பொருளாதார வர்த்தக நிலையத்தின் வர்த்தக சங்கத்தின் ஆலோசகர் சாந்த ஏக்கநாயக்க தெரிவித்தார்.
  • காய்கறிகளின் மொத்த விநியோகம் சுமார் 50 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும், இந்த அதிகப்படியான விநியோகம் தாழ்நில மற்றும் உயர்நிலப் பகுதி காய்கறிகளின் விலை வீழ்ச்சியில் நேரடியாகத் தாக்கம் செலுத்தியுள்ளதாகவும் மொத்த வியாபாரிகள் குறிப்பிட்டனர்.
  • நேற்று (29ஆம் திகதி) போஞ்சி அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டதுடன், நீண்ட பூசணி குறைந்த விலைக்கு விற்பனையானது.
எழுத்து அளவு:

தம்புளை விசேட பொருளாதார வர்த்தக நிலையத்தின் மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால், காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் ஆதங்கம் வெளியிடுகின்றனர்.

தினசரி மொத்த விநியோகம் 15 - 20 லட்சம் கிலோகிராம் வரை அதிகரித்துள்ளமையே இவ்வாறு விலை குறைவதற்கான பிரதான காரணம் என தம்புளை விசேட பொருளாதார வர்த்தக நிலையத்தின் வர்த்தக சங்கத்தின் ஆலோசகர் சாந்த ஏக்கநாயக்க தெரிவித்தார்.

காய்கறிகளின் மொத்த விநியோகம் சுமார் 50 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும், இந்த அதிகப்படியான விநியோகம் தாழ்நில மற்றும் உயர்நிலப் பகுதி காய்கறிகளின் விலை வீழ்ச்சியில் நேரடியாகத் தாக்கம் செலுத்தியுள்ளதாகவும் மொத்த வியாபாரிகள் குறிப்பிட்டனர்.

வழமை போன்று நாடு முழுவதிலும் உள்ள விசேட பொருளாதார வர்த்தக மையங்களுக்கு பிரதான நகரங்கள் மற்றும் உப நகரங்களிலிருந்து மொத்தக் கொள்வனவாளர்கள் வருகை தந்திருந்ததாகவும் வியாபாரிகள் மேலும் தெரிவித்தனர்.

நேற்று (29ஆம் திகதி) போஞ்சி அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டதுடன், நீண்ட பூசணி குறைந்த விலைக்கு விற்பனையானது. ஒரு கிலோ போஞ்சியின் மொத்த விலை 200-300 ரூபாவாக இருந்தது. பச்சை மிளகாய் 150-200, குடை மிளகாய் 150-250, தக்காளி 80-100, வெள்ளரி 30-35, முள்ளங்கி 30-40, பூசணி 35-40 என்ற மொத்த விலையில் விற்பனை செய்யப்பட்டன.

இதேவேளை, உள்ளூர் பெரிய வெங்காயத்தின் ஒரு கிலோ மொத்த விலை 120 ரூபாவாகக் குறைந்துள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயம், மொத்தச் சந்தையின் தேவைக்கு ஏற்ப குறைந்த விலையில் விநியோகிக்கப்படுவதே, உள்ளூர் பெரிய வெங்காயத்தின் கேள்வி குறைவடையக் காரணம் என வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். ஒரு நாளைக்கு சுமார் 02-03 இலட்சம் கிலோகிராம் உள்ளூர் பெரிய வெங்காயம் மொத்தச் சந்தைக்குக் கிடைப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...