Tamil Leader News
முக்கியம்
அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●புதிய 2 பாதுகாப்புச் சட்டங்களால் GSP+ சலுகைக்கும் பாரிய அச்சுறுத்தல் - சட்ட நிபுணர்கள் எச்சரிக்கை!●குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●
செய்திகள்

மிரிஹான போராட்டம் - வரலாற்றில் முதன்முறையாக ஒன்றுதிரண்ட 300க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள்!

T

The Leader Desk

ஏப்ரல் 2, 2022 • 5:03 PM

மிரிஹான போராட்டம் - வரலாற்றில் முதன்முறையாக ஒன்றுதிரண்ட 300க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கைது செய்யப்படுவதற்கு முன்பும் பின்னரும் போராட்டக்காரர்கள் பொலிஸாரினால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
  • இந்நிலையிலேயே கைது செய்யப்பட்டவர்களுக்காக 300க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் சுயேட்சையாக நேற்று (01) முன்வந்தனர்.
  • இதன் போது அத தெரண கொழும்பு பிராந்திய ஊடகவியலாளர் நிஸ்ஸங்க வேரபிட்டிய காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எழுத்து அளவு:


கைது செய்யப்படுவதற்கு முன்பும் பின்னரும் போராட்டக்காரர்கள் பொலிஸாரினால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் தனிப்பட்ட வாசஸ்தலத்திற்கு அருகில் நேற்று முன்தினம் இடம்பெற்ற போராட்டத்தை செய்தி சேகரிப்பதற்காக அத தெரண மற்றும் ஏனைய ஊடகவியலாளர்கள் பலர் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்த நிலையில், போராட்டத்தை ஒளிப்பதிவு செய்யும் போது பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினரால் இவ்வாறு தாக்கப்பட்டனர்.
இதன் போது அத தெரண கொழும்பு பிராந்திய ஊடகவியலாளர் நிஸ்ஸங்க வேரபிட்டிய காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, நேற்று பிற்பகல் நிஸ்ஸங்க வெரபிட்டியவுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையிலேயே கைது செய்யப்பட்டவர்களுக்காக 300க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் சுயேட்சையாக நேற்று (01) முன்வந்தனர்.
மிரிஹான பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற சட்டத்தரணிகள், ஆர்ப்பாட்டக்காரர்கள் சார்பில் ஆஜராகி நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
சட்டத்தரணிகள் தமது கட்சிக்காரர்களை கைதட்டி வரவேற்றது நீதித்துறை வரலாற்றில் இதுவே முதன்முறை எனவும், ஒரேயொரு வழக்குக்காக இவ்வளவு அதிகளவான சட்டத்தரணிகள் முன்வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...