Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

ரோஹித ராஜபக்ஷவுக்கு 30 கோடி ரூபாய் பெறுமதியான வீடா?

T

The Leader Desk

ஜூன் 18, 2021 • 10:22 AM

ரோஹித ராஜபக்ஷவுக்கு 30 கோடி ரூபாய் பெறுமதியான வீடா?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கடைசி மகனான ரோஹித ராஜபக்ஷ தற்போது தங்கியிருக்கும் வீட்டின் பெறுமதி 30 கோடி ரூபாவுக்கு மேல் என சமகி மஹரகம நகர சபை உறுப்பினர் தனுஷ்க ராமநாயக்க தெரிவித்துள்ளார்.இணையத்தளம் ஊடாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.
  • ஆனால் 30 ரூபா கோடி ரூபா பெறுமதியான வீட்டில் வசிக்கின்றார் என்பது மாத்திரமே தனக்கு தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • ரோஹித ராஜபக்ஷவின் பிறந்த நாள் அன்று அங்கு சிலர் கூடி பிறந்த நாள் கொண்டாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கடைசி மகனான ரோஹித ராஜபக்ஷ தற்போது தங்கியிருக்கும் வீட்டின் பெறுமதி 30 கோடி ரூபாவுக்கு மேல் என சமகி மஹரகம நகர சபை உறுப்பினர் தனுஷ்க ராமநாயக்க தெரிவித்துள்ளார்.இணையத்தளம் ஊடாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார். எனினும் அந்த வீடு ரோஹித ராஜபக்ஷவின் பெயரில் உள்ளதா என்பது தனக்து தெரியாது. ஆனால் 30 ரூபா கோடி ரூபா பெறுமதியான வீட்டில் வசிக்கின்றார் என்பது மாத்திரமே தனக்கு தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரோஹித ராஜபக்ஷவின் பிறந்த நாள் அன்று அங்கு சிலர் கூடி பிறந்த நாள் கொண்டாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இது தொடர்பில் ரோஹித ராஜபக்ஷவிடம், ஊடகங்கள் கேள்வி எழுப்பிய போதிலும் அவர் இதுவரையிலும் பதிலளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம் கேட்ட போது, குறித்த வீட்டில் தனது தம்பி வாழ்வதாகவும் வாடகை அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அவரது பிறந்த நாள் அன்று அங்கு விருந்துகள் அல்லது மக்கள் ஒன்றுக்கூடும் சம்பவங்கள் இடம்பெறவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...