Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

30 இளைஞர்கள் கைது விவகாரம்: காத்தான்குடியில் பதற்றம்: இராணுவமும் குவிப்பு

T

The Leader Desk

மார்ச் 1, 2024 • 2:25 PM

30 இளைஞர்கள் கைது விவகாரம்: காத்தான்குடியில் பதற்றம்: இராணுவமும் குவிப்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என காத்தான்குடி காவல்நிலைய பொறுப்பதிகாரி டி.பி.கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
  • மட்டக்களப்பு - காத்தான்குடி பகுதியில் அதிகாலை நடைபெற்ற சுற்றிவளைப்பில் சுமார் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • இதன்படி, 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • அத்துடன், பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம், கைது செய்யப்பட்ட 30 பேரும் ஒப்படைக்கப்படவில்லை.
எழுத்து அளவு:

செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என காத்தான்குடி காவல்நிலைய பொறுப்பதிகாரி டி.பி.கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு - காத்தான்குடி பகுதியில் அதிகாலை நடைபெற்ற சுற்றிவளைப்பில் சுமார் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த பகுதிக்கு அதிகளவிலான இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. 

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் காத்தான்குடி காவல்நிலைய பொறுப்பதிகாரி டி.பி.கஜநாயக்க தெரிவித்ததாவது,

"காத்தான்குடியில் இன்று மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கை தொடர்பான விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எமக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் உடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி, 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர்களில் சஹ்ரானின் உறவினர்களும் உள்ளடங்குகின்றனர்.

குறித்த தரப்பினர் தற்போது விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை நாளைய தினம் காத்தான்குடி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அத்துடன், பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம், கைது செய்யப்பட்ட 30 பேரும் ஒப்படைக்கப்படவில்லை. இது தொடர்பில் வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை” என தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...