Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

படுகொலை செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல்

T

The Leader Desk

பிப்ரவரி 19, 2024 • 9:42 AM

படுகொலை செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குறித்த நிகழ்வானது நேற்று (18) மாலை 03.30 மணியளவில் ஆரம்பமாகியது.
  • சுண்டிக்குளம் தொடுவாய் வாய்க்காலில் (1994.02.18) அதிகாலை, கடலில் கட்டுமரங்களில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளையில் சிறிலங்கா கடற்படையின் டோரா படகுகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 கடற்றொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
  • குறித்த நினைவேந்தல் நிகழ்வின் பொதுச் சுடரினை கட்டைக்காடு பங்குத்தந்தை அமல்ராஜ் ஏற்றிவைத்துள்ளார்.
எழுத்து அளவு:

குறித்த நிகழ்வானது நேற்று (18) மாலை 03.30 மணியளவில் ஆரம்பமாகியது.

சுண்டிக்குளம் தொடுவாய் வாய்க்காலில் (1994.02.18) அதிகாலை, கடலில் கட்டுமரங்களில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளையில் சிறிலங்கா கடற்படையின் டோரா படகுகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 கடற்றொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி கடற்றொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வின் பொதுச் சுடரினை கட்டைக்காடு பங்குத்தந்தை அமல்ராஜ் ஏற்றிவைத்துள்ளார்.

அத்துடன் உயிரிழந்த பத்து கடற்றொழிலாளர்களின் உறவுகள் ஈகைச்சுடரினை ஏற்றி இறந்த தமது உறவுகளுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இதனுடன் இறுதி நிகழ்வாக நட்புரீதியான உதைபந்தாட்ட போட்டிகள் நடைபெற்றதோடு வெற்றிக் கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...