Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

ஜப்பானில் சரக்கு கப்பலுடன் மற்றொரு கப்பல் மோதல்! 3 மாலுமிகள் மாயம்

T

The Leader Desk

மே 28, 2021 • 11:25 AM

ஜப்பானில் சரக்கு கப்பலுடன் மற்றொரு கப்பல் மோதல்! 3 மாலுமிகள் மாயம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜப்பான் நாட்டின் மேற்கே எஹிம் மாகாண கடற்பகுதியில் 11,454 டன் எடை கொண்ட அந்நாட்டு சரக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், இரசாயன பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்ற வெளிநாட்டு கப்பல் ஒன்றுடன், சரக்கு கப்பல் மோதி விபத்திற்குள்ளானது.
  • இந்த திடீர் விபத்தில் சிக்கிய சரக்கு கப்பல் சேதமடைந்து நீரில் மூழ்க தொடங்கியது. அந்த கப்பலில் 12 மாலுமிகள் இருந்தனர். சரக்கு கப்பல் நேற்று அதிகாலை 2.45 மணியளவில் கடலில் மூழ்க தொடங்கியது. இந்த விபத்தில் மாலுமிகளில் 3 பேரை காணவில்லை.
  • அவர்கள் ஜப்பானிய நாட்டை சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. மார்ஷல் தீவில் பதிவு செய்யப்பட்ட 2,696 டன் எடை கொண்ட வெளிநாட்டு கப்பலில் 13 பேர் இருந்தனர்.
  • அவர்களில் 8 பேர் தென்கொரியா நாட்டை சேர்ந்தவர்கள். மற்ற 5 பேர் மியான்மர் நாட்டை சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரும் பாதுகாப்புடன் உள்ளனர். இதனை ஜப்பானிய கடலோர காவல் படை தெரிவித்துள்ளது. காணாமல் போன 3 மாலுமிகளை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
எழுத்து அளவு:

ஜப்பான் நாட்டின் மேற்கே எஹிம் மாகாண கடற்பகுதியில் 11,454 டன் எடை கொண்ட அந்நாட்டு சரக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது.  இந்நிலையில், இரசாயன பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்ற வெளிநாட்டு கப்பல் ஒன்றுடன், சரக்கு கப்பல் மோதி விபத்திற்குள்ளானது.

இந்த திடீர் விபத்தில் சிக்கிய சரக்கு கப்பல் சேதமடைந்து நீரில் மூழ்க தொடங்கியது.  அந்த கப்பலில் 12 மாலுமிகள் இருந்தனர்.  சரக்கு கப்பல் நேற்று அதிகாலை 2.45 மணியளவில் கடலில் மூழ்க தொடங்கியது.  இந்த விபத்தில் மாலுமிகளில் 3 பேரை காணவில்லை.

அவர்கள் ஜப்பானிய நாட்டை சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது.  அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.  மார்ஷல் தீவில் பதிவு செய்யப்பட்ட 2,696 டன் எடை கொண்ட வெளிநாட்டு கப்பலில் 13 பேர் இருந்தனர்.

அவர்களில் 8 பேர் தென்கொரியா நாட்டை சேர்ந்தவர்கள்.  மற்ற 5 பேர் மியான்மர் நாட்டை சேர்ந்தவர்கள்.  அவர்கள் அனைவரும் பாதுகாப்புடன் உள்ளனர்.  இதனை ஜப்பானிய கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.  காணாமல் போன 3 மாலுமிகளை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...