Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

‘அநுரகுமார 3 தடவைகள் தொடர்புகொண்டு அழைப்பு விடுத்தார்’

T

The Leader Desk

ஏப்ரல் 10, 2024 • 3:52 AM

‘அநுரகுமார 3 தடவைகள் தொடர்புகொண்டு அழைப்பு விடுத்தார்’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அழைத்தமையின் நிமித்தம் நேரடியாகச் சென்றேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
  • இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில் - “யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மாநாட்டுக்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸநாயக்கா அன்றுமாலை 3 தடவைகள் தொலைபேசியில் நேரடியாக அழைப்பெடுத்து எனக்கு அழைப்பு விடுத்தார்.
  • இதன்போது கூட்டத்திலும் பங்குகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
எழுத்து அளவு:

அழைத்தமையின் நிமித்தம் நேரடியாகச் சென்றேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

சுமந்திரனுக்கு தனிப்பட்ட அழைப்பை எமது கட்சி விடுக்கவில்லை எனவும், அழையா விருந்தாளியாக வந்தவரையே வந்தாரை வரவேற்கும் பண்பிற்கமைய வரவேற்றோம் என்வும், மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில் -

“யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மாநாட்டுக்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸநாயக்கா அன்றுமாலை 3 தடவைகள் தொலைபேசியில் நேரடியாக அழைப்பெடுத்து எனக்கு அழைப்பு விடுத்தார். இதன்போது கூட்டத்திலும் பங்குகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

இருந்தபோதும் கூட்டத்தில் பங்குகொள்ள முடியாது, கூட்டம் நிறைவுற்றதும் சந்திக்கின்றேன் எனக்கூறி கூட்டம் நிறைவுபெறும் எனக் கூறப்பட்ட நேரத்திற்குச் சென்றேன். அப்போதும் கூட்டம் நிறைவுபெறாத சூழலில் காத்திருந்து சந்தித்தேன். இதேநேரம் அநுரகுமார திஸாநாயக்கவிடம் நான் பேசியவற்றைச் சந்திரசேகரனிற்கு கூறவேண்டிய கட்டாயம் கிடையாது.

அத்துடன் சமஷ்டியைப் பற்றியோ, தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பிலோ, எனக்கோ கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், எமது கட்சியின் சிறிதரனை விட, அநுரவுக்கு எவ்வளவு தெரியும் எனபவை உள்ளிட்ட ஏனைய விடயங்களையும் இடம்பெற்றவைகளையும் அவர் தனது தலைவரிடமேகேட்டு அறிந்துகொள்ள முடியும்” என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...