Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

உலக அளவில் விநியோகிக்கப்பட்ட தடுப்பூசிகள் 3 நாடுகளுக்கு மட்டுமே சென்றுள்ளது!

T

The Leader Desk

ஜூன் 5, 2021 • 11:50 AM

உலக அளவில் விநியோகிக்கப்பட்ட தடுப்பூசிகள் 3 நாடுகளுக்கு மட்டுமே சென்றுள்ளது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உலகம் முழுவதும் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்காற்றி வருகின்றன.
  • உலகம் முழுவதும் இதுவரை 10 சதவீதத்துக்கு அதிகமான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.உலக அளவில் இதுவரை விநியோகிக்கப்பட்ட 200 கோடி கொரோனா தடுப்பூசிகளில் 60 சதவீதம் மூன்று நாடுகளுக்கு மட்டுமே சென்றடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
  • இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கேப்ரியேசஸ் கூறியதாவது;- உலகம் முழுவதும் இதுவரை 200 கோடி தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
  • இதில் 60 சதவீத தடுப்பூசிகள் அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய மூன்று நாடுகளுக்கே சென்றடைந்துள்ளன.
எழுத்து அளவு:

உலகம் முழுவதும் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்காற்றி வருகின்றன. மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பு மருந்தைப் பெருவாரியாகக் கொண்டுசென்ற இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தியுள்ளன.

உலகம் முழுவதும் இதுவரை 10 சதவீதத்துக்கு அதிகமான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.உலக அளவில் இதுவரை விநியோகிக்கப்பட்ட 200 கோடி கொரோனா தடுப்பூசிகளில் 60 சதவீதம்  மூன்று நாடுகளுக்கு மட்டுமே சென்றடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கேப்ரியேசஸ் கூறியதாவது;-

உலகம் முழுவதும் இதுவரை 200 கோடி தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இதில் 60 சதவீத தடுப்பூசிகள் அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய மூன்று நாடுகளுக்கே சென்றடைந்துள்ளன. கோவாக்ஸ் திட்டம் தடுப்பூசியை உலக நாடுகளிடையே பகிர்ந்தளிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது.

கோவாக்ஸ் திட்டம் மூலம் சுமார் 127 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. தனி நபர் வருமானம் குறைவாக உள்ள நாடுகளில் சுமார் 0.5 சதவீத தடுப்பூசிகளே சென்றடைந்துள்ளன. இன்னும் பல நாடுகளில் சுகாதாரப் பணியாளர்களுக்கும், வயதானர்களுக்கும் கொரோனா தடுப்பூசிகள் போடப்படவில்லை.

எனவே, தடுப்பூசிகள் விரைவாக விநியோகம் செய்வதை நாம் அதிகரிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...