Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

வயதானவர்கள் அதிகரிப்பால் சீனாவில் 3-வது குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதி!

T

The Leader Desk

மே 31, 2021 • 1:10 PM

வயதானவர்கள் அதிகரிப்பால் சீனாவில் 3-வது குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அதன் படி 2000 முதல் 2010ஆம் ஆண்டு வரை சீனாவின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 0.57 சதவீதமாக இருந்தது.
  • இந்த அளவு 2010 முதல் 2020 வரையிலான 10 ஆண்டுகளில் 0.53சதவீதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அதன்படி 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மொத்த மக்கள்தொகையில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையும், 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.
  • ஆனால் 15 முதல் 59 வயதிற்குட்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக சரிந்திருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
எழுத்து அளவு:

அதன் படி 2000 முதல் 2010ஆம் ஆண்டு வரை சீனாவின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 0.57 சதவீதமாக இருந்தது. இந்த அளவு 2010 முதல் 2020 வரையிலான 10 ஆண்டுகளில் 0.53சதவீதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மொத்த மக்கள்தொகையில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையும், 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.

ஆனால் 15 முதல் 59 வயதிற்குட்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக சரிந்திருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

தலைகீழ் வயது கட்டமைப்பு காரணமாக சுருங்கி வரும் மக்கள் தொகை சிக்கலாக அமையும். சீனாவில் இளைஞர்களை விட வயதானவர்கள்  அதிகம்.

எதிர்காலத்தில் வயதானவர்களுக்கு ஆதரவளிக்க போதுமான தொழிலாளர்கள் இருக்க மாட்டார்கள், மேலும் உடல்நலம் மற்றும் சமூகப் பாதுகாப்புக்கான தேவை அதிகரிக்கும்.

நாடு மிகவும் வளர்ச்சியடையும் போது, கல்வி அல்லது பிற முன்னுரிமைகள் காரணமாக பிறப்பு விகிதங்கள் வீழ்ச்சியடையும்.

இந்த நிலையில்  மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்ததை அடுத்து குழந்தை பிறப்பை ஊக்குவிக்க சீன அரசு முடிவு செய்தது. இந்நிலையில், சீனாவில் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அரசு அனுமதித்துள்ளது.

மக்கள் தொகை பெருக்கத்தை குறைக்க பல ஆண்டுகளுக்கு முன் வீட்டுக்கு ஒரு குழந்தை என்ற திட்டத்தை சீனா அமல்படுத்தியது. சீனாவில் குடும்பத்துக்கு ஒரு குழந்தை கட்டுப்பாடு அதன் தலைவர் மாவோ காலத்திலேயே ஆரம்பித்துவிட்டது. ஆனால் அவர் இறந்த பின்பே, அது அமலுக்கு வந்தது.

சுமார் 40 ஆண்டுகள் நீடித்த அந்த கட்டுப்பாட்டால் மில்லியன் கணக்கான கட்டாய கருக்கலைப்புகளும், குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டன. இதையடுத்து, ஒரு குழந்தை திட்டத்தை அடுத்து மக்கள் தொகை கட்டுக்குள் வந்ததால் 2016ல் சீனா கொள்கையை தளர்த்தியது.

அதன்படி குடும்பத்துக்கு 2 குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என 2016ல் தளர்வை சீன அரசு அறிவித்தது. தொடர்ந்து குழந்தை பிறப்பு கொள்கையில் தளர்வை அறிவித்த பிறகும் மக்கள் தொகை எதிர்பார்த்த அளவு அதிகரிக்கவில்லை. இந்நிலையில், மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்ததை அடுத்து குடும்பத்துக்கு 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள சீன அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...