மஹா ஓயா நீரேந்தும் பகுதிகளின் உயர் நீரோட்டப் பகுதிகளில் கடந்த 24 மணிநேர காலப்பகுதியில் கடுமையான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக, நீர்ப்பாசனத் திணைக்களம் மஹா ஓயா பள்ளத்தாக்கின் தாழ் நிலப் பகுதிகளில், அண்மைய வரலாற்றில் இல்லாத ஒரு அதி உயர் அபாய வெள்ளம் ஏற்படக்கூடும் என்று கணித்துள்ளது.
பொதுமக்கள் முடிந்தவரை விரைவாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலைமை காரணமாக கிரியுல்ல மற்றும் படல்கம அளவீட்டு மையங்களில் மிக அதிக நீரை எட்டியுள்ளதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திவுலப்பிட்டிய, அலவ்வ, கட்டான, மீரிகம, தங்கொட்டுவ, பன்னல, நாரம்மல, நீர்கொழும்பு மற்றும் வென்னப்புவ ஆகிய பிரதேசங்களில் உள்ள தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது.


