யானைக்கால் நோய் ஒழிப்புச் செயற்பாட்டின் பணிப்பாளர் விசேட வைத்தியர் பிரசங்க சேரசிங்க தெரிவித்தார்.
இந்த நோயாளிகளைக் கண்டறிய மேற்கொள்ளப்படும் விசேட இரத்தப் பரிசோதனைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், இரவு வேளையில் அதற்காக வீட்டுக்கு வரும் பொதுச் சுகாதார அதிகாரிகளுக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறும் அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.
இந்த இரத்தப் பரிசோதனை தொடர்பில் கடந்த காலத்தில் தவறான குரல் பதிவுகள் மூலம் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இந்தச் செயற்பாட்டுக்குத் தடங்கல் ஏற்படுத்த வேண்டாம் என்றும் நேற்றைய தினம் (28ஆம் திகதி) சுகாதார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விசேட வைத்தியர் கேட்டுக்கொண்டார்.
இந்த நடவடிக்கைகளுக்குத் தடை ஏற்படுத்தி யானைக்கால் நோய் நோயாளிகளைக் கண்டறிவதைத் தடுப்பதன் மூலம் சமூகத்திற்குப் பெரும் தீங்கு ஏற்படும் என்றும் அவர் மேலும் கருத்துத் தெரிவித்தார்.
விசேட வைத்தியர் பிரசங்க சேரசிங்க மேலும் கருத்து தெரிவிக்கையில்:
"இரவு 8 மணிக்கு மேல் நாங்கள் இந்தத் திட்டத்தை ஆரம்பிக்கிறோம். இரவு 11 மணி வரை இதைச் செய்கிறோம். இந்தக் இரத்தப் பரிசோதனைக்கு வரும்போது, சம்பந்தப்பட்ட பிரதேசத் தலைவர்களுக்கு அறிவித்து, பிரதேசவாசிகளுக்கு முன்கூட்டியே அறிவித்த பின்னரே வருகிறோம். மக்கள் பயப்படத் தேவையில்லை, எங்கள் அதிகாரிகள் உத்தியோகபூர்வ சீருடையுடனேயே வருவார்கள். ஹம்பாந்தோட்டை, மாத்தறை, காலி, களுத்துறை, கம்பஹா, கொழும்பு, குருநாகல், புத்தளம் போன்ற பிரதேசங்களிலேயே இந்த நோய் அதிகமாகக் காணப்பட்டது. மற்ற மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் மிக அரிதாகவே பதிவாகின்றனர்."


