செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இது கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்குச் செல்ல அரசாங்கப் பணத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதன்படி, வாக்குமூலம் அளிப்பதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாதம் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி தொடர்பான மருத்துவ அறிக்கைகளைக் கவனத்தில் கொண்ட கோட்டை நீதவான் நிலுப்புலி லங்காபுர, முன்னாள் ஜனாதிபதியை தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளின் கீழ் விடுதலை செய்ய உத்தரவிட்டதுடன், வழக்கின் விசாரணைகளை இன்று மீண்டும் எடுத்துக்கொள்ளுமாறும் உத்தரவிட்டார்.


