மேற்கொள்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் 72 மணிநேர தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுள்ளது.
கணேமுல்ல சஞ்சீவவைக் கொலைசெய்ய வந்த இஷாரா செவ்வந்திக்கு, பிஸ்டலை மறைத்து எடுத்துச் செல்வதற்காகவே இந்தச் சட்டத்தரணி, தண்டனைச் சட்டத் தொகுப்பின் (Penal Code) பிரதியைக் கொடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சட்டத்தரணி நேற்று (28) இரவு கடுவெல பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.
கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி வழக்கு நடவடிக்கைக்காக சிறைச்சாலை அதிகாரிகளால் அளுத்கடை நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ, அந்த நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.
சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அன்றைய தினமே பாதுகாப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட போதிலும், துப்பாக்கியை நீதிமன்ற வளாகத்துக்குள் கொண்டுவந்த இஷாரா செவ்வந்தி என்ற நபரை கைதுசெய்ய பாதுகாப்புப் பிரிவினர் பெரும் முயற்சி எடுத்தனர்.
அவர் கடந்த 14ஆம் திகதி நேபாளத்தில் தங்கியிருந்தபோது கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக, இஷாரா செவ்வந்தி தப்பிச் செல்ல உதவிய மேலும் சிலரும் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


