Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

சினிமா பாணியில் சிக்கிய குற்றவாளிகள் இன்று இலங்கைக்கு அழைத்துவரப்படுவர்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 29, 2025 • 2:39 AM

சினிமா பாணியில் சிக்கிய குற்றவாளிகள் இன்று இலங்கைக்கு அழைத்துவரப்படுவர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நபர்கள் இந்தோனேசியாவில் தலைமறைவாகி இருந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • நேற்று பிற்பகல் 1.00 மணியளவில் அவர்கள் தங்கும் இடங்களை விட்டு வெளியேறி ஒரே இடத்தில் கூடியுள்ளனர்.
  • பெக்கோ சமன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் அந்த இடத்திற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
  • அவர்களின் தங்குமிட மாற்றத்துடன், பாதுகாப்பு கமராக்கள் மற்றும் தொலைபேசி வலையமைப்புகளை பகுப்பாய்வு செய்து குழுவைப் பிடிக்க பொலிஸ் குழுவினருக்கு சுமார் 2 மணி நேரம் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
எழுத்து அளவு:

நபர்கள் இந்தோனேசியாவில் தலைமறைவாகி இருந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இருந்து சென்ற சிறப்பு பொலிஸ் குழுவொன்று, இந்தோனேசிய பொலிஸாருடன் இணைந்து இந்த சிறப்பு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், இலங்கை பொலிஸாருக்கு சிம்மசொப்பமாக திகழ்ந்த முக்கிய குற்றவாளிகள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறப்பு நடவடிக்கையினை அறிந்து கொண்ட கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட குற்றவாளிகள் தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில், சினிமா பாணியில் சுற்றிவளைத்த பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.

3 இடங்களில் தங்கியிருந்த சந்தேக நபர்கள் படகு மூலம் இந்தோனேசியாவிலிருந்து தப்பிச் செல்லத் தயாரான விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நேற்று பிற்பகல் 1.00 மணியளவில் அவர்கள் தங்கும் இடங்களை விட்டு வெளியேறி ஒரே இடத்தில் கூடியுள்ளனர். கமாண்டோ சாலிந்த, பாணந்துறை நிலங்க மற்றும் தம்பரி லஹிரு ஆகியோர் ஒரே இடத்தில் தங்கியிருந்துள்ளனர்.

அவர்கள் தங்குமிடத்திலிருந்து ஒரு வேனில் ஏறி ஜகார்த்தாவில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றுள்ளனர். பெக்கோ சமன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் அந்த இடத்திற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

கெஹெல்பத்தர பத்மேவும் அவர்களுடன் அங்கு இணைந்துள்ளார். அவர்களின் தங்குமிட மாற்றத்துடன், பாதுகாப்பு கமராக்கள் மற்றும் தொலைபேசி வலையமைப்புகளை பகுப்பாய்வு செய்து குழுவைப் பிடிக்க பொலிஸ் குழுவினருக்கு சுமார் 2 மணி நேரம் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

கெஹெல்பத்தர பத்மே நீண்ட காலமாக இந்தோனேசியாவில் பதுங்கி இருப்பதாகவும், ஏனைய சந்தேக நபர்கள் சமீபத்தில் இந்தோனேசியாவிற்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இந்தோனேசியாவை மையமாகக் கொண்டு, தாய்லாந்து, மலேசியா, டுபாய், அபுதாபி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளுக்கு இடையே தரை மற்றும் நீர்வழிகள் வழியாக அவர்கள் பயணம் செய்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சர்வதேச குற்றவியல் பொலிஸாரால் அவர்களுக்கு சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், விமானம் மூலம் பயணம் செய்யாமல் கவனமாக இருந்ததாகவும் தெரியவந்துள்ளது

எல்லை பொலிஸாரை தவிர்த்து, இந்த குழு நாடுகளுக்கு இடையே பயணம் செய்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது. இந்தக் குழுவைப் பிடிப்பது முற்றிலும் ஒரு தொழில்நுட்ப நடவடிக்கையாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த குற்றவாளிகள் நாளை இந்தோனேசிய பொலிஸாரின் உதவியுடன் இலங்கைக்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...